ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

மலையாள நடிகையான மித்ரா குரியன், விஜய் நடித்த காவலன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். விஜய்யை அசின் காதலிக்க நான்தான் உங்களை காதலித்தேன் என்று பொய் சொல்லி விஜய்யை திருமணம் செய்து கொள்ளும் கேரக்டரில் நடித்திருப்பார். அதன் பிறகு கந்தா உள்பட சில படங்களில் நடித்தார். கடைசியாக சமீபத்தில் வெளிவந்த புத்தனின் சிரிப்பு படத்தில் நடித்தார். தற்போது நந்தனம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த ஆண்டுதான் தான் காதலித்து வந்த வில்லியம் பிரான்சிஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
மலையாளம், மற்றும் தமிழில் சினிமா வாய்ப்புகள் குறைந்து விட்டதால் தற்போது சின்னத்திரை சீரியலுக்கு வந்து விட்டார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரியசகி தொடரின் நாயகி மித்ரா குரியன் தான். குடும்ப உரிமைக்காக போராடும் திவ்யா என்ற கேரக்டரில் நடிக்கிறார். அவருடன் ராஜ்மோகன், நித்யா, ராஜா நடிக்கிறார்கள். மித்ரா தொடர்ந்து சின்னத்திரையிலும், சினிமாவிலும் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார்.




