பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

தமிழ் தொலைக்காட்சிகள் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு சீரியல்களை வெளியிட்டு வருகின்றனர். சினிமாவை விட சீரியலுக்கு தற்போது மவுசு கூடிவிட்ட நிலையில் கதை பஞ்சம் காரணமாக படத்தின் கதையை அப்படியே உல்ட்டா செய்து சீரியலாக உருட்டி வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவியிலும் வேலைக்காரன் என்ற சீரியல் ஒளிபரப்பாகி வந்தது. இதில் சபரி, கோமதி, சத்யா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வந்தனர். சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஹிட் படமான முத்து படத்தின் ரீமேக் என்பதால் ஆரம்பத்திலிருந்தே ரசிகர்களுக்கு இந்த சீரியல் மேல் நாட்டம் இல்லை.
எனினும் உருட்டி பிரட்டி 409 எபிசோடுகள் ஓட்டிவிட்டனர். இந்நிலையில் மே 7ம் தேதி மதியம் 2 மணிக்கு, இந்த சீரியலின் க்ளைமாக்ஸ் எபிசோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாகியுள்ளது. முடிக்கவா வேண்டாமா என பல நாட்கள் கன்ப்யூசனில் இருந்த நிலையில் படக்குழு ஒருவழியாக வேலைக்காரன் சீரியலை முடித்து வைத்துவிட்டது. விரைவில் இதே டீம் புதிய கதையம்சத்துடன் மற்றொரு சீரியலில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.




