Advertisement

சிறப்புச்செய்திகள்

மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹிந்தியில் சூரரைப்போற்று - சூர்யாவே தயாரிக்கிறார்

12 ஜூலை, 2021 - 11:25 IST
எழுத்தின் அளவு:
SooraraiPottru-hindi-announced

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிக்க ஓ.டி.டி.,யில் வெளியான படம் சூரரைப்போற்று. ஏர் டெக்கான் நிறுவனத்தின் அதிபர் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் வரவேற்பை பெற்றது. அதோடு, 78வது கோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்வில் பத்து இந்திய மொழி திரைப்படங்கள் மட்டும் திரையிடப்பட்டன. அதில் சூரரைப் போற்று திரைப்படமும் ஒன்று. மேலும் 93வது ஆஸ்கர் அகாடமி விருதுக்கான போட்டியிலும் சூரரைப் போற்று திரையிடப்பட்டது.

இப்படத்தை இப்போது ஹிந்தியில் ரீ-மேக் செய்கின்றனர். இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் அபண்டன்ஷியா நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் நடிகர், நடிகையர் குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை. படத்தை சுதா கொங்கராவே ஹிந்தியிலும் இயக்க உள்ளார்.

ஹிந்தி ரீ-மேக் குறித்து சூர்யா பேசுகையில், "சூரரைப் போற்று திரைப்படத்திற்கு கிடைத்த அன்பும், பாராட்டும் இதுவரை பார்த்திராதது. இந்தக் கதையை நான் கேட்டது முதலே இது தென்னக ரசிகர்களுக்கான படமாக மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கான படமாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஏனெனில் அந்தக் கதையில் ஜீவன் அத்தகைய வலிமை வாய்ந்ததாக இருந்தது. உழைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உத்வேகம் தரும் கேப்டன் கோபிநாத்தின் கதையை ஹிந்தியில் தயாரிப்பதும், தரமான படங்களை தொடர்ந்து தந்து வரும் அபண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பதும் எனக்கு அதிக மகிழ்ச்சியைத் தருகிறது" என்றார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
வந்தாச்சு.... ‛வலிமை அப்டேட் வந்தாச்சு.... ரசிகர்கள் ஹேப்பி ‛போனி கபூர் அண்ணாச்சிவந்தாச்சு.... ‛வலிமை அப்டேட் ... அரசியல் ‛நோ, ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு : ரஜினி அறிவிப்பு அரசியல் ‛நோ, ரஜினி மக்கள் மன்றம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Aanandh - thamizhnaadu,யூ.எஸ்.ஏ
14 ஜூலை, 2021 - 11:16 Report Abuse
Aanandh அப்பன் ஆன்மீகமுன்னு ஏமாத்துறான், பொஞ்சாதி இந்துமதத்தை இழிவு செஞ்சு இஸ்லாத்துக்கு ஸலாம் போடறா. இவன் மும்பைல சொத்து குவிக்கிறான். கதம் கதம் ரஜினி, தமிழனை மொட்டையடிச்சு கர்நாடகாவில குவிக்கிற மாதிரி. எல்லாம் திருட்டுப்பசங்க.
Rate this:
Srinivasan - Bangalore,இந்தியா
13 ஜூலை, 2021 - 11:44 Report Abuse
Srinivasan தமிழ் பசங்கள இந்தி படிக்க உடாதீங்க. ஆனால், நீங்க மட்டும் இந்தி படம் எடுத்து காசு சம்பாதீங்க. நல்ல ஒழுக்கம் இது.
Rate this:
kudiyanavan - coimbatore ,இந்தியா
12 ஜூலை, 2021 - 14:24 Report Abuse
kudiyanavan உண்மைக்கதையை உன் இஷ்டத்துக்கு மாற்றிய நீ ஹிந்தில மட்டும் நல்லவை யா சொல்ல போற .
Rate this:
12 ஜூலை, 2021 - 13:43 Report Abuse
Taas Vyas சூரரைப் போற்றுவதால் சூரராகி விடமுடியாது-மந்திரம் வலிமையெனும் பாரதியின் புதிய ஆத்திச்சூடியை படிக்கட்டும்-ஆதாரம்-விஷ்ணுரசகஸ்ரநாமத்தில் வரும் சுரநரகககோ எனும் சமஸ்க்ருதப் பதம்-இவர்களனைவரும் நெருப்பை ஏன் முன்னோர் வணங்கினரெனும் உண்மை தெரியாதவர்கள்,மறைப்பவர்கள்-சூரர்கள் வீரத்தால் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்து ஆயுத அஸ்திராதிகளாலும் முஷ்டி சிஷ்ட ஆயுதாதி மூர்க்கத்தாலும் அதர்மத்தை வளர்க்கத் துணிந்து ஏமாந்தவர்கள்-அப்படித் தோற்றழிந்தவர்களை போற்றச் சொல்வது எது சுயஅறிவா, பகுத்தறிவா, கடவுள் மறுப்பா, பொய்ச்சாதியமா, பொறாமைக் குளமா, இல்லாமையை இல்லாமையாக்க தவறிய வெறும் பணமா?இவை எவை சூரரப் போற்றச் சொல்கிறது-உப்பங்கழி உருவாக்கும் ஒருகல் உப்பை உருவாக்க முடியாதவன் உலகையே கட்டிக்காப்பதாக கனவு கண்டு அமை மற்றவர்களையும் நம்ப வைப்பது முட்டாள் தனமன்றியெது?-தபஸ் வ்யாஸ்-எரிதழற்கண்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in