கல்யாணியைப் போல அமலாபாலுக்கும் கை கொடுக்குமா டிராகுலா ஜானர் படம்? | ரங்தே பசந்தி 20ம் வருட நிறைவு : படக்குழுவினருடன் சேர்ந்து கொண்டாடிய அமீர்கான் | கார் விபத்தில் இளைஞர்கள் காயம் : நிற்காமல் சென்ற மலையாள நடிகர் கைதாகி ஜாமீனில் விடுதலை | ஜப்பானில் ரிலீஸாகும் ‛குபேரா' | அனிமேஷனில் தயாராகும் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் | ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள லக்கி பட டிரைலர் வெளியானது | கலைத்துறை வித்தகர் விருது : எம்.என் ராஜம் அரசுக்கு கோரிக்கை | சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: விசாரணைக்கு ஆஜராக ஜெயராமுக்கு சம்மன் | 'பராசக்தி'யை ஓடிடி வெளியீட்டை தடுக்க கோர்ட் மறுப்பு | எம்.என்.ராஜம், எஸ்.பி.முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது |

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் கடந்த வருட நான்காவது சீசனின் போட்டியாளராக டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் அர்ச்சனா கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் 'அன்பு கேங்' என்று சில போட்டியாளர்களை தன்னுடன் சேர்த்துக் கொண்டு ரசிகர்களின் பலத்த விமர்சனங்களையும் பெற்றார்.
'பிக் பாஸ்' நிகழ்ச்சி முடிந்த பிறகு விஜய் டிவியின் சில நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். இருந்தாலும் அதற்கு முன்பு அவர் பணியாற்றிய ஜீ தமிழ் டிவி நிகழ்ச்சிகளில் வாங்கிய பெயரைப் போல அவரால் பெயர் வாங்க முடியவில்லை. சமீபத்தில் அவரது யு டியூப் சேனலில் இடம் பெற்ற 'பாத்ரூம்' வீடியோவும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது ரேடியோ மிர்ச்சி எப்எம்-மில் ஆர்ஜே-வாக இணைந்துள்ளார். இன்று முதல் 'ஹை சென்னை வித் அச்சுமா' என்ற நிகழ்ச்சியை காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை தொகுத்து வழங்குகிறார்.
கடந்த வருட பிக் பாஸ் சீசனில் ஒரு டாஸ்க்கில் 'ரேடியோ ஆர்ஜே' போல அர்ச்சனா பேசியது அவருக்கு மிகப் பெரும் பாராட்டைப் பெற்றுத் தந்தது. அந்த டாஸ்க்கை தற்போது நிஜ வாழ்க்கையிலும் ஆரம்பித்துவிட்டார். அர்ச்சனாவின் புதிய ஆர்ஜே பணிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.




