Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஐதராபாத்தில் தனி பாதுகாப்பு வளையத்தில் ரஜினிகாந்த்

23 டிச, 2020 - 11:19 IST
எழுத்தின் அளவு:
Annaatthe-Shooting-:-Big-safegaurd-to-Rajinikanth

சிவா இயக்கத்தில் அனிருத் இசையில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு மற்றும் பலர் நடிக்கும் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு பத்து நாட்களுக்கு முன்பு ஐதராபாத்தில் ஆரம்பமானது.

அப்படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா தனுஷ் உடன் தனி விமானத்தில் பயணம் செய்தார். அந்த விமானத்திலேயே படத்தின் நாயகிகளில் ஒருவரான நயன்தாராவும் பயணம் செய்தார்.

படப்பிடிப்பு முடியும் வரை அப்பா ரஜினிகாந்த்தை கவனித்துக் கொள்வதற்காக ஐஸ்வர்யா உடன் சென்றதாக தகவல் வெளியானது. படப்பிடிப்பு நேரம் தவிர மற்ற நேரங்களில் ரஜினிகாந்த்தை யாரும் நெருங்காத வகையில் ஐஸ்வர்யா கவனித்துக் கொள்கிறாராம். மேலும், ரஜினிக்கென பிரத்யேகமாக பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளதாம். அதை மீறி யாரும் நெருங்க முடியாது என்கிறார்கள்.

படப்பிடிப்பை எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடித்துவிட ரஜினிகாந்த் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாம். அதனால், இரவு, பகல் பாராமல் படக்குழுவினர் வேலை பார்த்து வருகிறார்களாம். ரஜினியும் முடிந்தளவு அதிக நேரம் இரவு, பகல் பார்க்காமல் நடித்து கொடுத்து வருகிறாராம்.

இதனிடையே, ரஜினிகாந்தை சில அரசியல் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள் சந்தித்து பேசி வருகிறார்கள் என்றும் சில செய்திகள் வெளியாகி வருகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மாஸ்டர் மீது வருத்தத்தில் ஆண்ட்ரியா ?மாஸ்டர் மீது வருத்தத்தில் ஆண்ட்ரியா ... அண்ணாத்த படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு : திரும்புகிறாரா ரஜினிகாந்த்? அண்ணாத்த படப்பிடிப்பில் 4 பேருக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

seshadri - chennai,இந்தியா
23 டிச, 2020 - 11:53 Report Abuse
seshadri very importantly rajini should not ally with Kamalhasan. if he does so hindus will not vote for that alliance. Because kamal is a hindu virodhi and anti national who has no moral ethics to any religion or human.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in