Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? - சுயம்வரம்

15 டிச, 2020 - 09:21 IST
எழுத்தின் அளவு:
Marakkamudiyuma---Suyamvaram

படம் : சுயம்வரம்
வெளியான ஆண்டு : 1999
நடிகர்கள் : கார்த்திக், பிரபு, சத்யராஜ், குஷ்பு, ரோஜா
இயக்கம் : கே.எஸ்.ரவிக்குமார், சுந்தர்.சி, அர்ஜுன், பி.வாசு
தயாரிப்பு : கிரிதர்லால் நாக்பால்

கின்னஸ் சாதனை படைத்த படம், சுயம்வரம். 23 மணி நேரம், 58 நிமிடங்களில் படமாக்கப்பட்ட முதல் திரைப்படம், இது. உலக சினிமா வரலாற்றில், தமிழ் சினிமா படைத்த புதிய சாதனை இது. இப்படத்தில், முன்னணி கதாநாயகர்கள், 14 பேர்; 12 கதாநாயகியர் நடித்தனர். ஆர்.சுந்தர்ராஜன் முதல் சிராஜ் வரை, 14 இயக்குனர்கள் இப்படத்தை இயக்கினர். தேவா, வித்யாசாகர், ராஜ்குமார், சிற்பி ஆகியோர் இசையமைத்துள்ளனர். ஒளிப்பதிவாளர், உதவி இயக்குனர், நடன இயக்குனர் என, மொத்தம், 1,453 பேர் இணைந்து, இப்படத்தில் பணிபுரிந்தனர். பிரமிக்க செய்யும் சாதனை இது.

1999 ஏப்., 5ம் தேதி காலை, 6:00 மணிக்கு, ஏ.வி.எம்., ஸ்டூடியோவில், படப்பூஜை நடைபெற்றது. காலை, 7:00 மணிக்கு படப்பிடிப்பு துவங்கியது; மறுநாள் காலை, 6:58 மணிக்கு படம் முழுவதும் முடிக்கப்பட்டது. முதலில் கதையை, 11 பாகங்களாக பிரித்தனர். ஒவ்வொரு பாகத்திற்கும், தனித்தனியே படக்குழு அமைக்கப்பட்டது. சென்னையின் வெவ்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. சூட்டோடு சூடாக, அதே நேரத்தில், டப்பிங் மற்றும் ரீ ரெகார்டிங் வேலைகளும் நடைபெற்றன. ஒவ்வொரு காட்சி முடிந்ததும், உடனே எடிட்டிங் செய்யப்பட்டது. நடிகர்கள் உடனே ஸ்டுடியோவுக்கு சென்று, டப்பிங் பேசினர்.

விஜயகுமார் - மஞ்சுளாவின், ஒன்பது பிள்ளைகளுக்கும் ஒரே நாளில் திருமணம் நடத்த வேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது. அதற்காக சுயம்வரம் ஏற்பாடு செய்யப்படுகிறது. மணமகன், மணமகளை தேர்ந்தெடுக்கும் பணியில் பாக்யராஜும், ஊர்வசியும் நடித்திருந்தனர். நகைச்சுவை படமான இதில், அனைவருக்கும் சரிசமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும், சாதனைக்காக, மறக்க முடியுமாவில் இடம் பெற்றுள்ளது, சுயம்வரம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - முதல்வன்மறக்க முடியுமா? - முதல்வன் மறக்க முடியுமா? - காதலர் தினம் மறக்க முடியுமா? - காதலர் தினம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in