Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகர் சூரிக்கு ஐகோர்ட் அறிவுரை

08 டிச, 2020 - 19:26 IST
எழுத்தின் அளவு:
Court-advice-to-soori

சென்னை : மோசடி புகாரில் தன்னிடம் உள்ள ஆதாரங்களை, போலீசிடம் அளிக்கும்படி, நடிகர் சூரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வீட்டுமனை எனக்கூறி, விவசாய நிலத்தை அதிக விலைக்கு விற்றதாகவும், தன்னை மோசடி செய்து விட்டதாகவும், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ரமேஷ் குடவாலா, சினிமா தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனுக்கு எதிராக, நடிகர் சூரி புகார் அளித்தார். மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். நீதிமன்ற உத்தரவுப்படி, இருவருக்கும் எதிராக, சென்னை, அடையாறு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கை, சி.பி.ஐ., அல்லது வேறு ஏஜன்சி விசாரணைக்கு மாற்றக்கோரி, உயர் நீதிமன்றத்தில், சூரி மனு தாக்கல் செய்தார். இம்மனு, நீதிபதி ரவீந்திரன் முன், விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பிலான அறிக்கையை, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பிரபாவதி தாக்கல் செய்து, அடையாறு போலீசார் நேர்மையாக விசாரிக்கின்றனர்;

முன்னாள் டி.ஜி.பி.,க்கு எதிராக, ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை, என்றார். சூரி தரப்பில், வழக்கறிஞர் இன்பேன்ட் தினேஷ் ஆஜராகி, சூரியிடம் உரிய ஆதாரங்கள் உள்ளன. சி.பி.ஐ.,க்கு உத்தரவிடும்பட்சத்தில், அங்கு ஒப்படைப்பார். விசாரணையை நீதிமன்றம் மேற்பார்வையிட்டால், அடையாறு போலீசாரிடம் அளிக்க தயார், என்றார். இதையடுத்து, ஆதாரங்களை அடையாறு போலீசாரிடம் ஒப்படைக்க, சூரிக்கு உத்தரவிட்டு, விசாரணையை, நான்கு வாரங்களுக்கு, நீதிபதி ரவீந்திரன் தள்ளிவைத்தார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மேக்னா ராஜ் மற்றும் குழந்தைக்கு கொரோனா பாசிடிவ்மேக்னா ராஜ் மற்றும் குழந்தைக்கு ... தடையை மீறி தீப தரிசனம்: சஞ்சிதா மீது நடவடிக்கை தடையை மீறி தீப தரிசனம்: சஞ்சிதா மீது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Kumar - ,
09 டிச, 2020 - 00:39 Report Abuse
Kumar cbi must
Rate this:
KayD - Mississauga,கனடா
08 டிச, 2020 - 21:10 Report Abuse
KayD பாவம் படிப்பு அறிவு இல்லாத ஒருவன ஏமாற்ற பட போகிறான்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in