Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'லெஸ்பியன்' கதையில் நடித்து அதிர்ச்சி தரும் அஞ்சலி

04 டிச, 2020 - 14:14 IST
எழுத்தின் அளவு:
Anjali-acted-as-lesbian

தமிழ் சினிமாவில் நமது பக்கத்து வீட்டுப் பெண் போல இருக்கிறார் என பாராட்டுக்களைப் பெற்றவர் அஞ்சலி. சில முக்கியமான படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து நல்ல பெயரைப் பெற்றவர்.

ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள 'பாவக் கதைகள்' என்ற தலைப்பிலான குறும்படங்களில் வர உள்ள ஒரு படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஞ்சலி, கல்கி கோச்சலின் ஆகியோர் நடித்துள்ளனர்.

கதைப்படி அஞ்சலி, கல்கி கோச்சலின் ஆகிய இருவரும் 'லெஸ்பியன்' உறவில் இருப்பவர்களாம். அதனால், ஏற்படும் பிரச்சினைகள்தான் படத்தின் கதை. இதில் அஞ்சலி ஆபாசமாக நடித்திருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், இந்த 'பாவக் கதைகள்' ஓடிடி படத்தில் இடம் பெறும் நான்கு கதைகளுமே தாங்கள் பெற்ற மகள்களை அவர்களது அப்பாக்களே கௌரவக் கொலை செய்வதாகத்தான் கதைகள் அமைக்கப்பட்டுள்ளதாம்.

ஓடிடி தளங்களில் வெளியாகும் இப்படியான படங்களுக்கு எந்தவிதமான தணிக்கையும் இல்லாத காரணத்தால் எந்த ஒரு வரைமுறையும், கட்டுக்கோப்பும் இல்லாமல் கதைகள், காட்சிகள், வசனங்களை அமைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இந்தப் படம் வெளியான பின்பு நிச்சயம் சர்ச்சையை ஏற்படுத்தும் என்றே சொல்கிறார்கள். சர்ச்சைக்குரிய இப்படியான கருக்களைக் கொடுத்து மக்களிடம் பிரபலமாக இப்படியான விஷயங்களை ஓடிடி நிறுவனங்கள் செய்கின்றன என திரையுலகத்தில் உள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மாஸ்டர் - கிறிஸ்துமஸில் டிரைலர், பொங்கலில் படம் ரிலீஸ்  ?மாஸ்டர் - கிறிஸ்துமஸில் டிரைலர், ... கல்யாணத்திற்குப் பிறகு காஜல் கண்டிஷன் போடுவாரா ? கல்யாணத்திற்குப் பிறகு காஜல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Sathish - Erode,இந்தியா
05 டிச, 2020 - 20:29 Report Abuse
Sathish //இந்தப் படம் வெளியான பின்பு நிச்சயம் சர்ச்சையை ஏற்படுத்தும் என்றே சொல்கிறார்கள்// யாரு சொன்னா? இந்த பத்திரிக்கைகாரங்களே சொல்லிக்கறது..
Rate this:
04 டிச, 2020 - 17:49 Report Abuse
Naga Rajan Now theres a new law introduced last week to censor the ott serials, so i think this movie may have many cuts
Rate this:
VELAN S - Chennai,இந்தியா
04 டிச, 2020 - 17:36 Report Abuse
VELAN S இதை எல்லாம் காசு நேரம் செலவழித்து ஏன் பார்க்கிறீர்கள் , வேணுமுன்னா பாண் சைட் எவ்வளவோ நெட் இல் இருக்கு , பிரீ ஆ பூய் அதை பாருங்களேண் வேறன்ன சொல்ல .
Rate this:
Karthik -  ( Posted via: Dinamalar Android App )
04 டிச, 2020 - 16:29 Report Abuse
Karthik Taboo subject la Padam edunga ana konjam ganniyathoda screenplay vainga. social message a spicy than sollanumnu illa.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in