Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'குறும்படம், குருமா படம்' என்ற அர்ச்சனாவுக்கு கமல் தந்த அதிர்ச்சி

29 நவ, 2020 - 14:27 IST
எழுத்தின் அளவு:
Kamal-trolled-Archana

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் 'பிக் பாஸ்' சீசன் 4 இந்த வாரம் கொஞ்சம் காரசாரமாகப் போனது. பிக் பாஸ் வீட்டிற்குள் இரண்டு குழு இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமானது.

நேற்று அப்படியான இரண்டு குழுக்களைப் பற்றி கமல்ஹாசன் தனது விமர்சனத்தைப் பதிவு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சி ஒரு குழு நிகழ்ச்சி அல்ல, ஒவ்வொருவரும் தனித்தனியாக விளையாட வேண்டிய நிகழ்ச்சி என்றார்.

அர்ச்சனா, ரியோ, நிஷா, சோம், ரமேஷ், கேப்ரியாலா ஆகியோர் அடங்கிய ஆறு பேர் கொண்ட குழுவும், பாலா, சம்யுக்தா, ஷிவானி, ஆஜித் ஆகியோர் அடங்கிய நால்வர் குழுவும் வீட்டிற்குள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது பற்றி இரண்டு குழுவினருமே நேற்று கமல்ஹாசன் முன்பும் சண்டையிட்டுக் கொண்டார்கள். சனம், ரம்யா, ஆரி, அனிதா ஆகியோர் மட்டுமே தனித்தனியாக விளையாடி வருகிறார்கள்.

முதல் சீசனில் கலந்து கொண்ட போட்டியாளரான ஜுலி மூலம் பிக் பாஸ் வீட்டில் 'குறும்படம்' என்பது பிரபலமானது. சொன்னதை சொல்லாததாகவும், சொல்லாததை சொன்னதாகவும் மாற்றி மாற்றிப் பேசுபவர்களுக்கு அந்த குறும்படம் சரியான பதிலடியாக இருந்தது.

இப்படியான குறும்படம் பற்றி ஒரு சந்தர்ப்பத்தில் நிஷாவிடம் அர்ச்சனா பேசம் போது, ''குறும்படம், குருமா படம்' என்ன காட்றாங்கன்னு பார்ப்போம்,” என்று பேசியிருந்தார்.

இன்றைய இரண்டாவது புரோமோவில் ஆரி தன்னுடைய தாய்மையைப் பற்றி விமர்சனம் செய்தார் என சம்யுக்தா புகார் தெரிவித்தது பற்றி கமல்ஹாசன் பேசுகையில் ஆரி அப்படி பேசவில்லை என நான் நினைக்கிறேன் என்று கூறுகிறார். மேலும், “ஆரி அப்படி சொல்லியிருந்தால், அவர் ஒரு வழிதான் இன்னைக்கு, இது குறும்படமல்ல, அர்ச்சனா சொல்ற மாதிரி குருமா படமும் அல்ல, படம்,” என கோபமாகப் பேசி அர்ச்சனாவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினி வருகிறார் பராக்... பராக்...! - டுவிட்டரில் டிரெண்டிங்ரஜினி வருகிறார் பராக்... பராக்...! - ... 'பிக் பாஸ்' தெலுங்கில் 'நான் ஈ' சுதீப் 'பிக் பாஸ்' தெலுங்கில் 'நான் ஈ' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

LAX - Trichy,இந்தியா
30 நவ, 2020 - 18:30 Report Abuse
LAX வாய்கிழியப் பேசும் அர்ச்சனா வாயை மேலும் கிழித்து, பிறகு தைத்துவிட்டார்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in