Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முறைகேடு : தோல்வியடைந்தவர்கள் புகார்

27 நவ, 2020 - 18:33 IST
எழுத்தின் அளவு:
T-Rajendar-complaint-agains-election

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கான 2020-22ம் ஆண்டிற்கான நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த ஞாயிறு அன்று 22ம் தேதி நடைபெற்று, முடிவுகள் மறுநாள் அறிவிக்கப்பட்டன. தேர்தலில் நலன் காக்கும் அணி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் முறைகேடு செய்ததாக சுயேச்சையாகப் போட்டியிட்ட சிங்காரவேலன், ஜேஎஸ் சதீஷ்குமார் ஆகியோர் இதற்கு முன்பு குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்நிலையில் பாதுகாப்பு அணி சார்பாக போட்டியிட்டு தோற்ற டி.ராஜேந்தர் மற்றும் சிங்காரவேலன், ஜேஎஸ் சதீஷ்குமார் ஆகியோர் இன்று தற்போது தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகித்து வரும் தனி அலுவலரைச் சந்தித்து புகார் கடிதம் ஒன்றைக் கொடுத்துள்ளனர்.

அதில், “ஓட்டளித்தவர்களில் 400 பேர் வரவில்லை என தெரிகிறது. சங்கத்தில் 300 பேர் சந்தா செலுத்தவில்லை. இவர்களில் தொடர்பு கொள்ள முடியாத 200 பேரின் சந்தாவை மொத்தமாக செலுத்தி அவர்களின் அடையாள அட்டையை வைத்து கள்ள ஓட்டு போட்டுள்ளனர். எனவே ஓட்டளித்த 1050 உறுப்பினர்களின் முகவரி, அலைபேசி எண் அடங்கிய பட்டியல், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பதிவான ஓட்டுகளின் விபரம், ஓட்டளித்த உறுப்பினர்கள், ஓய்வு பெற்ற நீதியரசர் ஜெயச்சந்திரன் கையொப்பமிட்ட அடையாள அட்டையை பெற்றுக் கொண்ட போது சம்பந்தப்பட்ட உறுப்பினர் கையொப்பமிட்ட ரிஜிஸ்டரின் நகல், ஓட்டளிப்பதற்கு முன் ஓட்டுச்சீட்டுகளை பெறும் போது உறுப்பினர் கையொப்பமிட்ட ரிஜிஸ்டரின் நகல்,” ஆகிய ஆவணங்களை வழங்கும்படி'' கேட்டுக் கொண்டுள்ளார் டி.ராஜேந்தர்.

சிங்காரவேலன், ஜேஎஸ் சதீஷ்குமார் மற்றும் தன்னுடன் போட்டியிட்டவர்களுடன் பத்திரிகையாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர் தன்னுடைய போராட்டத்தைத் தொடர்வேன் என்று தெரிவித்தார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நடிப்பதை தற்காலிகமாக நிறுத்த டாக்டர் ராஜசேகர் முடிவுநடிப்பதை தற்காலிகமாக நிறுத்த ... 'அந்தகாரம்' குழுவைப் பாராட்டிய கமல்ஹாசன் 'அந்தகாரம்' குழுவைப் பாராட்டிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

raj -  ( Posted via: Dinamalar Android App )
28 நவ, 2020 - 09:12 Report Abuse
raj endha aluku vara valaielai
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in