முதல்வர் வெளியிட்ட எம் ஜி ஆர் பாடல் | 18ஆம் வருடத்தில் ஒக்கடு ; மகேஷ்பாபு மனைவி மீது தயாரிப்பாளர் வருத்தம் | விரைவில் சுரேஷ்கோபியின் ஒத்தக்கொம்பன் ஆரம்பம் | சோனு சூட்டின் ரொமான்ஸ் இசை ஆல்பம் வெளியானது | பிப்ரவரியில் அடுத்தடுத்து வெளியாகும் பார்வதியின் 2 படங்கள் | விஜய்சேதுபதியின் எழுத்தாளர் அவதாரம் | சொர்க்கத்தில் 1௦௦ நாட்கள் ; அமிதாப்பிற்கு புதிய பொறுப்பு | லூசிபர் தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா | விஜய்-65வது படத்திலும் வில்லனாகும் பிரபல ஹீரோ | நயன்தாரா பாணியில் செயல்பட்ட வனிதா விஜயகுமார் |
சந்தோஷ் பிரதாப், அதுல்யா ரவி நடித்த, என் பெயர் ஆனந்தன் படம், வரும், 27ம் தேதி தியேட்டரில் வெளியாகிறது. படத்தை, ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கியுள்ளார். படம் குறித்து படக்குழு கூறுகையில், 'த்ரில்லர் படத்திற்கென்றே உள்ள வழக்கமான கதைக்களங்களை தேர்வு செய்யாமல், சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, இப்படம் உருவாகியுள்ளது. 'இதுவரை யாருமே பேசாத, ஒரு சமூக பிரச்னையை கையிலெடுத்துள்ளோம். இப்படம், நிச்சயம் ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்தும். தென்கொரியா, நியூயார்க் உள்ளிட்ட சர்வதேச பட விழாவில், இப்படம் விருதுகளை பெற்றுள்ளது' என்றனர்.