Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மலையாள படத்தை ரீமேக் செய்யும் கேஎஸ் ரவிக்குமார்

04 நவ, 2020 - 18:50 IST
எழுத்தின் அளவு:
KS-Ravikumar-to-remake-Malayalam-film

மலையாள திரையுலகில் கடந்த வருடம் வெளியாகி ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்த படம் தான் 'ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்சன் 5.25'. மலையாளத்தில் முன்னணி காமெடி நடிகரான சுராஜ் வெஞ்சாரமூடு, இந்தப்படத்தின் கதையின் நாயகனாக 70 வயது கிழவராக அற்புதமாக நடித்திருந்தார். கூடவே அவருக்கு துணையாக ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் என்கிற ஒரு குட்டி ரோபோட்டும் நடித்திருந்தது. மலையாளத்தில் இந்த படம் ஹிட்டானதை தொடர்ந்து தற்போது தெலுங்கில் இந்த படத்தின் ரீமேக் உரிமை வாங்கப்பட்டு, அந்த வயதான கதாபாத்திரத்தில் நடிகர் மோகன்பாபு நடிக்க இருக்கிறார்.

இந்தநிலையில் இந்த படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் தயாரிக்க இருக்கிறார் என்கிற தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே கமல் நடித்த தெனாலி படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனவர் தான் கே.எஸ்.ரவிக்குமார். அதேபோலவே ஏற்கனவே மலையாளத்தில் வெளியான தேன்மாவின் கொம்பத்து படத்தை தான் ரஜினி நடிப்பில் முத்துவாக ரீமேக் செய்தார். அந்தவகையில் இந்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தை வெறுமனே தயாரிக்க மட்டும் செய்கிறாரா, இல்லை அவரே படத்தையும் இயக்குகிறாரா என்பது குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்போது தான் தெரியும்

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பெண் குழந்தைக்கு அப்பா ஆனார் சதீஷ்பெண் குழந்தைக்கு அப்பா ஆனார் சதீஷ் முன்னுரிமை தேநீருக்கு தான்! முன்னுரிமை தேநீருக்கு தான்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in