Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தொழிலதிபர் கவுதமை கரம் பிடித்தார் காஜல் - திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து

30 அக், 2020 - 22:18 IST
எழுத்தின் அளவு:
Kajal-married-Gautham

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிச்சுலுவை இன்று(அக்., 30) திருமணம் செய்தார். இவர்களின் திருமணம் மும்பையில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் வெகு விமரிசையாக நடந்தது. மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் மணமக்கள் நின்று போஸ் கொடுத்த போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின. கொரோனா ஊரடங்கால் இந்த நிகழ்வில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என 50 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.




முன்னதாக கடந்த இரு தினங்களாக திருமணத்திற்கு முன்பு நடக்கும் மருதாணி வைக்கும் வைபவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. அதில் எடுத்த படங்களையும், வருங்கால கணவருடன் உள்ள படங்களையும், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காஜல் பகிர்ந்துள்ளார். திரைஉலகினர் பலரும், புதுமண தம்பதிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.




திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவெடுத்துள்ளார் காஜல். தற்போது அவர் கைவசம் கமலின் இந்தியன் 2, சிரஞ்சீவியின் ஆச்சார்யா ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர அவர் நடித்து முடித்து நீண்டநாட்களாக வெளிவராமல் உள்ள பாரிஸ் பாரிஸ் படமும் விரைவில் வெளிவர உள்ளது.












Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஹன்சிகாவின் “மஹா” படப்பிடிப்பு நிறைவுஹன்சிகாவின் “மஹா” படப்பிடிப்பு ... முதலிரவு கலாட்டா பேசும் 'அல்வா! முதலிரவு கலாட்டா பேசும் 'அல்வா!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Endrum Indian - Kolkata,இந்தியா
31 அக், 2020 - 18:01 Report Abuse
Endrum Indian என்ன தொழில் அதிபர் குழந்தாய் ஆ ஊன்னா தொழில் அதிபர் என்று சொல்வது 2 வருடம் கழித்து தொழிலில் நஷ்டம் என்று மறுபடியும் நடிக்க வருவது????பாவம் உங்களை போன்றவர்களின் வாழ்க்கை
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
31 அக், 2020 - 09:40 Report Abuse
 Muruga Vel ஆயிரம் எலி சாப்பிட்டு பூனை புனித பயணம் போனது மாதிரி இருக்கு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in