மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
வனிதா முதல் இரண்டு கணவர்களை விவாகரத்து செய்த நிலையில் மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தார். பீட்டர் பால் முதல் மனைவியை தவிக்க விட்டு விட்டு இரண்டாவது திருமணம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து பலரும் விமர்சனம் செய்தனர். அவர்களில் முக்கியமானவர் கஸ்தூரி. இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி பேசி காரசாரமாக மோதிக் கொண்டார்கள்.
இந்த நிலையில் தற்போது 3வது கணவரையும் பிரிந்து விட்டார் வனிதா. பீட்டர் மீண்டும் குடிக்கு அடிமையாகி போனதால் நான் ஏமாந்து விட்டேன். என்று கண்ணீர் மல்க வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தார்.
இதுப்பற்றி கஸ்தூரி தனது டுவிட்டரில், ''உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை தனிப்பட்டதாக இருக்க வேண்டும் என்றால், அதை பற்றி சமூக வலைதளத்தில் பேசாதீர்கள். டெய்லி அப்டேட் கொடுப்பதுடன் இது போன்று அறிக்கை விடுவது ஏன்?. அவரை (வனிதா) யாரும் மீடியா சர்கஸ் ஆக்கவில்லை. அவர் தான் அப்படி ஒரு சர்கஸை உருவாக்கினார். மற்றவர்கள் குரங்குகள் தான் ஒரு ரிங் மாஸ்டர் என்று நினைத்தார். ஆனால் இப்போது ஜோக்கர் ஆகிவிட்டார். நான் நேர்மையானவள், நான் நேர்மையாக பேசுகிறேன் என்று இனி சொன்னால் அவ்வளவுதான்''. என்று தெரிவித்துள்ளார்.
மற்றொரு டுவீட்டில், “ஓ மை கடவுளே. நானும் அந்த கண்ணீர் வீடியோவை பார்த்தேன். எடிட்டிங் மற்றும் டைட்டில் கார்டுடன் உள்ளது. சொந்த வாழ்க்கையை வியாபாரம் செய்வது என்ன பொழைப்போ புரியலைடா சாமி. முழுக்க முழுக்க பொய். தற்புகழ்ச்சி, எல்லோரும் கெட்டவங்க. வனிதா மட்டும் பாதிப்புக்கு உள்ளானவர். எல்லாமே எதிர்பார்த்தவைதான். ஆனால் எலிசபெத் ஹெலன் மீது ஏன் குற்றம் சொல்லணும். நம்ப முடியவில்லை. வீடியோ இடையே 4 விளம்பரம் வேறு. எடிட் செய்யப்பட்ட இந்த வீடியோ மூலம் அதிக பணம் சம்பாதிக்கப்படும். அவர் பீட்டர் பாலுக்கான ஆஸ்பத்திரி செலவுகளை திரும்ப பெறுகிறார் என்று யூகிக்கிறேன். குழந்தைகளை இதில் வெளிப்படுத்த வேண்டாம்” என்று கூறியுள்ளார்.