Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இயக்குனர் ஆனார் வரலட்சுமி

18 அக், 2020 - 11:32 IST
எழுத்தின் அளவு:
Varalaxmi-Debut-as-Director

தமிழ் சினிமாவில் வித்தியாசமான நடிகை என பெயரெடுத்தவர் வரலட்சுமி சரத்குமார். ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்று இல்லாமல் தனக்கு கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் அறிந்து வில்லி வேடம் என்றாலும் தைரியமாக நடிப்பவர். தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து வரும் வரலட்சுமி அடுத்து இயக்குனராக களமிறங்குகிறார்.

தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி தயாரிக்கும் "கண்ணாமூச்சி" என்ற படத்தில் முதன்மை வேடத்தில் நடிப்பதுடன், திரைக்கதை அமைத்து இயக்குகிறார். இந்த நிறுவனம் அறிமுகம் செய்யும் முதல் பெண் இயக்குனரும் இவர் தான்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று (அக்., 18) அரசியல், சமூகம், மற்றும் திரை உலகை சார்ந்த 50 பெண் பிரபலங்கள் ஒரே சமயத்தில் வெளியிட்டனர்.

படத் தலைப்பை வெளியிட்ட பெண் பிரபலங்கள் : கனிமொழி(எம்.பி), சங்கீதா விஜய், கிருத்திகா உதயநிதி, ராதிகா சரத்குமார், குஷ்பு சுந்தர், சுகாசினி மணிரத்தினம், ஹேமா ருக்மணி, ரம்யா சுப்ரமணியம், ரேவதி, ஜோதிகா, சமந்தா, திரிஷா, சிம்ரன், சினேகா, தமன்னா, லட்சுமி ராய், ஹன்சிகா, டாப்சி, அபிராமி, சாய் பல்லவி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ரஜினி, சுருதிஹாசன், அக்சராஹாசன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் ப்ரீத், கீர்த்தி சுரேஷ், ரெஜினா , காஜல் அகர்வால், மஞ்சிமா மோகன், அதிதிரவிசந்திரன், பாவனா, திவ்யதர்ஷினி (டி.டி.) சோனியா அகர்வால், ரம்யா நம்பீசன், சாயிஷா, அதிதிராவ் ஹைதிரி, ஆர்த்தி ரவி, லட்சுமி மஞ்சு, சுஜாதா, கீதாஞ்சலி, கிக்சோனு, சின்மயி, அப்சரா ரெட்டி, சாரதா ஸ்ரீநாத், பிருந்தா மாஸ்டர், வாசுகி, டைரக்டர் காயத்ரி, ஜோஷ்னா சின்னப்பா, சிபி ஸ்ரீதேவி ஆகிய ஐம்பது பேர் தான் அவர்கள் இதுவும் ஒரு சாதனை தான்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சீரியலுக்கு குட்பை சொன்ன வாணி போஜன்சீரியலுக்கு குட்பை சொன்ன வாணி போஜன் 30 ஆண்டை கடந்தும் மறக்க முடியாத காவியப் படைப்பு மைக்கேல் மதன காமராஜன் 30 ஆண்டை கடந்தும் மறக்க முடியாத ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Shekar Raghavan - muscat,ஓமன்
18 அக், 2020 - 18:10 Report Abuse
Shekar Raghavan நிச்சயம் சாதனை படைப்பார்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in