Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தற்கொலை செய்ய முடிவு செய்தேன் : சனுஷா

17 அக், 2020 - 12:15 IST
எழுத்தின் அளவு:
I-had-suicidal-thoughts-says-Sanusha

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சனுஷா. தமிழில் ரேணிகுண்டா படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நாளை நமதே, எத்தன், அலெக்ஸ் பாண்டியன், கொடி வீரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மருமகன் என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி அங்கும் ஏராளமான படங்களில் நடித்தார்.

கொரோனா காலத்தில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார் சனுஷா. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருப்பதாவது :

கொரோனாவால் என் வாழ்க்கையிலும், தொழிலிலும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. எதிர்மறை எண்ணங்கள் தோன்றி என்னை பயமுறுத்தியது. மன அழுத்த பிரச்சினையால் தவித்தேன். எனக்கு பெரியதாக நண்பர்கள் வட்டம் இல்லை. உறவினர்களும் அருகில் இல்லை. இதனால் என் பிரச்சினைகளை யாரிடம் பகிர்ந்து கொள்வது என்றுகூட தெரியவில்லை.

தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். ஆனால் என்னையே நம்பி இருக்கும் என் தம்பி, என் மரணத்திற்கு பிறகு என்ன ஆவான் என்று நினைத்துப் பார்த்து அந்த எண்ணத்தை கைவிட்டேன். சில நண்பர்களின் ஆலோசனைப்படி மனநல மருத்துவர்களை சந்தித்தேன். அவர்களின் வழிகாட்டுதல்படி தற்போது மீண்டு வந்திருக்கிறேன்.

மன அழுத்தம் சதாரண பிரச்னை இல்லை. அதை கண்டுகொள்ளாவிட்டால் அது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மற்றவர்களுக்கு சொல்வதற்காகத்தான் இந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறேன். என்று பேசி இருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் பணி தொடங்கியது: 1303 பேர்தான் வாக்களிக்க முடியும்தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் பணி ... பிக்பாஸ் சீசன் 4 - வெளியேறப் போகும் முதல் போட்டியாளர் யார் ? பிக்பாஸ் சீசன் 4 - வெளியேறப் போகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Nisha Rathi - madurai தமிழக ஒன்றிய முதல்வரை ஒழிப்போம் இந்தியப்பேரரசுவை காப்போம் ,இந்தியா
17 அக், 2020 - 15:11 Report Abuse
Nisha Rathi உனக்கு மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தேன் தயவுசெய்து வேண்டாம் நீ என் வீட்டுக்கு வாமா நானும் என் பாமிலியும் உன்னை பத்திரமாக பாதுகாப்போம்.நான் சொல்வது வேடிக்கைக்கு அல்ல .உண்மையாக சொல்கிறேன்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in