Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என் தந்தை மீது பொய் குற்றச்சாட்டு: விஷ்ணு விஷால் விளக்கம்

09 அக், 2020 - 16:44 IST
எழுத்தின் அளவு:
Soori-complaint-:-Vishnu-Vishal-clarification

தயாரிப்பாளர்களான ராஜன் மற்றும் ரமேஷ் ஆகியோர் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 2.7 கோடி ரூபாயை ஏமாற்றியதாக சூரி தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதில் ரமேஷ் என்பவர் தீயணைப்புத்துறை முன்னாள் டிஜிபி மற்றும் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் ஆவார்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் தன் தந்தை மீது பொய் குற்றச்சாட்டு கூறப்படுவதாக விஷ்ணு விஷால் கூறியுள்ளார். இது தொடர்பாக வவர் வெளியிட்டுள்ள பதிவில், “என் மீதும் என் தந்தை மீதும் வைக்கப்பட்டிருக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளைப் பற்றிப் படித்தது மிகுந்த அதிர்ச்சிகரமாகவும், வருத்தமாகவும் இருந்தது. சிலர் உள்நோக்கத்துடன் செயல்படுவது கண்கூடாகத் தெரிகிறது.

உண்மையில் சூரி, விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸுக்கு ஒரு அட்வான்ஸ் பணத்தைத் திரும்பத் தர வேண்டும். "கவரிமான் பரம்பரை" என்ற படத்துக்காக 2017ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட பணம் அது, சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது. சட்டத்தின் மீதும் நீதித் துறையின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த நேரத்தில் இது பற்றி இன்னும் விரிவாகப் பேசுவது சரியாக இருக்காது. நாங்கள் சட்டம் அனுமதிக்கும் பாதையில் செல்வோம்.

உண்மை வரும் வரை ரசிகர்களும், நல விரும்பிகளும் காத்திருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். மேலும் உண்மையான தகவல்களுடன் இது பற்றி செய்தி வெளியிட வேண்டும் என்று ஊடகங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். எல்லாம் தெளிவான பிறகு சட்டப்படி சரியான நடவடிக்கையை நான் எடுப்பேன்” என விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஷ்ணு விஷாலின் தந்தை மீது சூரி புகார்விஷ்ணு விஷாலின் தந்தை மீது சூரி ... மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்த சிம்பு - வைரலாகும் புகைப்படங்கள் மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in