Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி: அதிகாரபூர்வ அறிவிப்பு

09 அக், 2020 - 12:57 IST
எழுத்தின் அளவு:
Vijaysethupathi-as-Muralitharan

சச்சின் டெண்டுல்கர், டோனி ஆகிய கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை திரைப்படமாக வெளிவந்துள்ளது. அந்த வரிசையில் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை சினிமாவாகிறது. இதில் முத்தையா முரளிதரன் கேரக்டரில் விஜய்சேதுபதி நடிக்கிறார்.

முத்தையா முரளிதரன் இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாடுகளை கொண்டவர் என்பதால் இங்குள்ள சில அமைப்புகள் அவர் வரலாற்று படத்தில் விஜய்சேதுபதி நடிக்க கூடாது என்று கூறி வந்தன. இந்த நிலையில் முத்தையா முரளிதரன் கேரடரில் விஜய்சேதுபதி நடிப்பது உறுதி என்று படத்தை தயாரிக்கும் மூவி ட்ரைய்ன் மோசன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. படம் குறித்த முழு தகவல்கள் இன்று வெளியிடப்படுகிறது.

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆகையால், இந்தப் படத்துக்கு 800 எனத் தலைப்பிட்டுள்ளனர். கனிமொழி படத்தை இயக்கிய எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கவுள்ள இந்தப் ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சி.எஸ் இசை அமைக்கிறார்.

விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ள கடைசி விவசாயி, மாஸ்டர், மாமனிதன், உபென்னா, இடம் பொருள் ஏவல் ஆகிய படங்கள் வரிசையாக வெளிவர இருக்கிறது. இதுதவிர யாதும் ஊரே யாவரும் கேளிர், லால் சிங் சத்தா, துக்ளக், தர்பார், காத்து வாக்குல ரெண்டு காதல், லாபம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் தெலுங்குப் படத்தில் அமிதாப்பச்சன்மீண்டும் தெலுங்குப் படத்தில் ... மூளை கட்டி பிரச்சினையில் இருந்து மீண்ட சரண்யா மூளை கட்டி பிரச்சினையில் இருந்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

கலைஞர் வழியில் ஆட்டையை போடுவோம், சுடலை: சென்னை போராட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in