Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'ஹேராம்' பட காட்சிகள் இப்போது நிஜத்தில் நடக்கிறது: கமல்ஹாசன்

03 அக், 2020 - 14:27 IST
எழுத்தின் அளவு:
HEY-RAM-MOVIE-SCENE-REALLY:-KAMALHASAN

நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமாக கமல்ஹாசன் நேற்று தனது கட்சியினர், மற்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணையதளம் வழியாக கலந்துரையாடினார் அப்போது அவர் கூறியதாவது:


நாடு முழுவதும் வன்முறையும், பலாத்காரமும் பெருகி விட்டது. தினமும் புது புது சட்டங்களை போட்டு மீண்டும் மன்னராட்சியை கொண்டுவர திட்டமிடுகிறார்கள். கூத்தாடிகள், நடிகர்கள் நாடாளலாமா என்று கேட்டு விட்டு இவர்கள் கூவத்தூரிலும், கலைவாணர் அரங்கிலும் கூத்தாடிக் கொண்டிருக்கிறார்கள்.


20 ஆண்டுகளுக்கு முன்பு சத்ரபதி என்ற ஒரு கவிதை எழுதினேன். அந்த கவிதையில் வரும் அதிகார திமிர்பிடித்தவன் போல் இப்போது உள்ளவர்கள் நடந்து கொள்கிறார்கள். 'ஹே ராம்' படத்தில் கூட்டு பலாத்கார காட்சிகளையும், வன்படுகொலைகளையும், மத கலவரங்களையும் கற்பனை காட்சிகளாக வைத்தேன். அது இப்போது நிஜத்தில் நடந்து வருகிறது.


இப்படியெல்லாம் நடக்கும் என்று எனக்கு முன்பே தெரியும் என்பதால்தான் அந்த காட்சிகளை வைத்தேன். மாணவிகளை பஸ்சோடு கொளுத்தியவர்கள் எங்களை என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். ஆனாலும் நாங்கள் துணிச்சலோடு பணியாற்றி வருகிறோம். கிராம சபை கூட்டத்தை இந்த ஆண்டுக்குள் நடத்த வேண்டும் அதற்காக தொடர்ந்து போராடுவோம், சட்ட நடவடிக்கைகளை எடுப்போம். என்றார்.


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
'துருவ நட்சத்திரம்' - லேசான வெளிச்சத்தில்...'துருவ நட்சத்திரம்' - லேசான ... பைரசி - தடுமாறும் ஓடிடி நிறுவனங்கள் பைரசி - தடுமாறும் ஓடிடி நிறுவனங்கள்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

sankar - Nellai,இந்தியா
05 அக், 2020 - 08:30 Report Abuse
sankar சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உணருகிறான் - இவர் ஆரியரா எப்புடி -
Rate this:
04 அக், 2020 - 12:22 Report Abuse
கதை சொல்லி ஓ... பிரிவினையின் போது நடந்த கொடூரங்கள் உங்களுக்கு கற்பனை காட்சியாக விட்டதா? காசுக்காகத்தான் எல்லோரும் ஓடிக்கொண்டிருக்கின்றனர், ஆனால் இது போல் தரம் தாழ்வது என்பது அந்த தொழிலுக்கு சமம்
Rate this:
corona - chennai,இந்தியா
03 அக், 2020 - 17:04 Report Abuse
corona பிக் பாஸ் ...நிகழ்ச்சி சமூக சீரழிவு இல்லையா....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in