Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அல்லு அர்ஜுன் குடும்பத்தினரின் சொந்த ஸ்டுடியோ

02 அக், 2020 - 11:57 IST
எழுத்தின் அளவு:
Allu-Arjun-to-construct-new-studio

தென்னிந்தியத் திரையுலகத்திற்கே மையப்புள்ளியாக இருந்த மாநகரம் சென்னை. இங்கு ஒரு காலத்தில் எண்ணற்ற ஸ்டுடியோக்கள் இருந்தன. ஏவிஎம், விஜய வாகினி, பிரசாத் என பெருமைமிக்க ஸ்டுடியோக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மூடப்பட்டுவிட்டன. தரமணியில் அரசு நிர்மாணித்த திரைப்பட நகரம் கூட இருந்தது. ஆனால், காலப்போக்கில் ஒவ்வொன்றாக குறைந்து இப்போது ஒரு சில ஸ்டுடியோக்கள் மட்டுமே இருக்கின்றன. அவற்றிலும் சினிமா படப்பிடிப்புகளை விட டிவி படப்பிடிப்புகள் தான் அதிகம் நடக்கின்றன.

அதே சமயம் தெலுங்குத் திரையுலகத்தின் முக்கிய படப்பிடிப்பு நகரமாக இருக்கும் ஐதராபாத்தில் பல ஸ்டுடியோக்கள் உள்ளன. மேலும், சில திரைப்படப் பிரபலங்கள் புதிது புதிதாக ஸ்டுடியோக்களை கட்ட ஆரம்பித்துள்ளார்கள்.

ஏற்கெனவே, ராமா நாயுடு குடும்பத்தினர் ராமா நாயுடு ஸ்டுடியோஸ், நாகேஸ்வரராவ் குடும்பத்தினர் அக்கினேனி ஸ்டுடியோஸ் என பெரிய ஸ்டுடியோக்களை வைத்துள்ளனர். அந்த வரிசையில் அல்லு அர்ஜுன் குடும்பத்தினர் அல்லு ஸ்டுடியோஸ் என்ற பெயரில் புதிய ஸ்டுடியோவை கட்ட ஆரம்பித்துவிட்டனர்.

அல்லு ராமலிங்கையா என்ற 1000 படங்களுக்கு மேல் நடித்த நடிகரின் பேரன்தான் அல்லு அர்ஜுன். சிரஞ்சீவியின் மாமனாரும் கூட. நேற்று அல்லு ராமலிங்கையாவின் 99வது பிறந்தநாளில் இந்த ஸ்டுடியோ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.

சிரஞ்சீவி, இயக்குனர் விநாயக் உள்ளிட்டோரும் ஸ்டுடியோக்களைக் கட்ட திட்டமிட்டுள்ளார்கள். ஆந்திரப்பிரதேச அரசும் விசாகப்பட்டிணத்தில் சில ஸ்டுடியோக்களைக் கட்ட அனுமதி அளித்துள்ளது.

தமிழ் சினிமா படப்பிடிப்புகள் கூட ஐதராபாத்தில் நடப்பதால் இங்குள்ள தமிழ் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், இங்குள்ள தமிழ் நடிகர்கள் யாரும் ஸ்டுடியோக்களைக் கட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை. அவர்கள் கல்யாண மண்டபங்களைக் கட்ட காட்டும் ஆர்வத்தில் சிறிதளவைக் கூட ஸ்டுடியோக்களைக் கட்ட ஆர்வம் காட்ட மறுக்கிறார்கள் என கோலிவுட்டில் புலம்புகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஸ்கை டைவிங் செய்து அசத்திய கல்யாணி பிரியதர்ஷன்ஸ்கை டைவிங் செய்து அசத்திய கல்யாணி ... 'க.பெ.ரணசிங்கம்'  படம் பார்ப்பதில் ஒரு சிக்கல் ? 'க.பெ.ரணசிங்கம்' படம் பார்ப்பதில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in