Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாற்றி மாற்றி பேசும் ஐஸ்வர்யா ராஜேஷ் ; மீண்டும் ஒரு சர்ச்சை

26 செப், 2020 - 20:14 IST
எழுத்தின் அளவு:
Aishwarya-Rajesh-trolled-by-fans

சமீபத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக திரையுலகை சேர்ந்த சிலர், 'இந்தி தெரியாது போடா' என்கிற வாசகம் கொண்ட டி-சர்ட் அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.. அப்படி எதிர்ப்பு தெரிவித்தவர்களில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டும் நெட்டிசன்களின் கருத்து தாக்குதலுக்கு ஆளானார். காரணம் அவர் 'டாடி' என்கிற ஒரு இந்திப்படத்தில் நடித்திருக்கிறார். அந்தபடத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இந்தியிலேயே பேசியும் இருந்தார். அப்படிப்பட்டவர், தான் பணம் சம்பாதிக்க இந்தியை பயன்படுத்திக்கொண்டு, மற்றவருக்கு ஹிந்தி கற்கும் வாய்ப்பு கிடைத்துவிட கூடாது என எதிர்ப்பு தெரிவித்து இரட்டை வேடம் போட்டதாலேயே அவருக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

இந்தநிலையில் மீண்டும் இன்னொரு இரட்டை வேட சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதாவது காக்கா முட்டை படம் வெளியான சமயத்தில் அதில் நடித்த அனுபவம் குறித்து, ஒரு பிரபல இணையதளத்தில் பகிர்ந்துகொண்டபோது, “சேரி பகுதி என்றாலே என்னவென்று தெரியாது.. அது எனக்கு புதிதாக இருந்தது” என்று கூறினார்..

ஆனால் கல்லூரி மாணவர்கள் மத்தியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியில் தன்னம்பிக்கை தரும் விதமாக பேசிய அவர், தனது வாழ்க்கை பயணம் குறித்து பகிர்ந்துகொண்டபோது, “நான் சேரி பகுதியில் பிறந்தவள்.. நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவள்” என குறிப்பிட்டு பேசியிருந்தார். இந்த இரண்டு வீடியோக்களும் யாரோ ஒரு நெட்டிசன் கண்ணில் பட்டுவிட, அதை அவர் சோஷியல் மீடியாவில் இணைத்து பதிவிட, தற்போது மீண்டும் ஒருமுறை ஐஸ்வர்யா ராஜேஷ் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

அவரது இரண்டு வீடியோக்களையும் கவனித்து பார்க்கும்போது, சினிமா வாய்ப்பு கிடைத்து வளரும் சமயத்தில் தன்னை சேரிப்பகுதியை சேர்ந்தவராக கூறிக்கொள்ள அவர் சங்கடப்பட்டிருக்கலாம் என்பதும், இப்போது வளர்ந்து பிரபலமாகி விட்டதால், சேரிப்பகுதியில் வளர்ந்தவள் என கூறுவதை பெருமையாக நினைத்துள்ளார் என்பதும் நன்றாகவே தெரிகிறது. ஆனால் இதுபோன்று மாற்றி மாற்றி பேசுவது அரசியல்வாதிகளுக்கே உள்ள குணம், ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அது அழகல்ல என நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
எஸ்.பி.பி.க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜாஎஸ்.பி.பி.க்காக திருவண்ணாமலையில் ... பிக்பாஸ் எனக்கு  பிடிக்கலை - லட்சுமி மேனன் கோபம் பிக்பாஸ் எனக்கு பிடிக்கலை - லட்சுமி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

KavikumarRam - Indian,இந்தியா
29 செப், 2020 - 10:20 Report Abuse
KavikumarRam கொரோன டைமில் படவாய்ப்புகள் இல்லை. இப்போது இவருக்கு தேவை நல்ல விளம்பரம். அதை வைத்து புதுப்பட வாய்ப்புகள். அதை வாசகர்களும் நெட்டிசன்கள் என்று சொல்லிக்கிட்டு திரியும் வேலை வெட்டி இல்லாதவர்களும் சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறீர்கள். இவளுக்கு இந்த தெரிஞ்சா என்ன சேரியில் பொறந்தா என்ன. கண்டுக்காம விட்டிட்டு போங்கப்பா. இவாள்ளாம் ஒரு ஆளுன்னு பெரியாளாக்கி விட்டுக்கிட்டு.
Rate this:
siriyaar - avinashi,இந்தியா
28 செப், 2020 - 16:27 Report Abuse
siriyaar இப்பெல்லாம் துண்டு சீட்டு எழுத சண்முகநாதன் மாதிரி திறமையான ஆள்கள் கிடைப்பது இல்லை, சுடலைக்கே இந்த நிலை இருக்க ஐஸ்வர்யாவுக்கு எங்க போக எழுசரவன் தப்பு வாசிக்கிறவனை பாதிக்கிறது.
Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
28 செப், 2020 - 10:44 Report Abuse
Natarajan Ramanathan இந்த பெண் உண்மையில் சேரியில் உள்ள ....
Rate this:
LAX - Trichy,இந்தியா
28 செப், 2020 - 05:08 Report Abuse
LAX Mr. Rajesh R, உங்க கருத்துல கடைசி வார்த்தையா, 'திரைத்துறையினரே.. அரசியல்வியாதிகளே..' - இப்புடி ஏதாவது போடுறதுக்கு பதிலா.. 'வாசகர்களே' னு போட்டுட்டீங்க.. 🧐
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
27 செப், 2020 - 23:13 Report Abuse
Ramesh R மற்றவர் மேல் கல் எரியும் பொது உங்கள் முகத்தை ஒரு நிமிடம் பார்த்து கொள்ளுங்கள் வாசர்களே
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in