Advertisement

சிறப்புச்செய்திகள்

விவேக் மறைவு என்னை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தியது - இளையராஜா | மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்துவோம் - சிம்பு | பிக்பாஸ் வீட்டுக்கு ஒரு வாரம் லீவு போட்ட சுதீப் | ஆறு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மீரா ஜாஸ்மின் | சித்தார்த் பிறந்தநாளில் மகாசமுத்ரம் போஸ்டர் வெளியீடு | தமிழில் உருவாகும் மோசன் காமிக்ஸ் சூப்பர் ஹீரோ படம் | இறுதிக்கட்டத்தில் அதர்வா படம் | எம்.ஜி.ஆர் மகன்: தந்தை மகன் ஊடலை சொல்லும் படம்: பொன்ராம் | ஹிந்தி டிவி நடிகை பாருல் சவுத்ரி குடும்பம் கொரோனாவால் பாதிப்பு | விடைபெற்றார் விவேக் : அரசு மரியாதையுடன் உடல் தகனம் - மரக்கன்றுகள் ஏந்தி ரசிகர்கள் அஞ்சலி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? - ரோஜா

24 செப், 2020 - 10:01 IST
எழுத்தின் அளவு:
Marakka-Mudiyuma---Roja

படம் : ரோஜா
வெளியான ஆண்டு : 1992
நடிகர்கள் : அரவிந்த்சாமி, மதுபாலா, பங்கஜ் கபூர், நாசர், ஜனகராஜ்
இயக்கம் : மணிரத்னம்
தயாரிப்பு : கே.பாலசந்தர்

அரசு உயர் அதிகாரி ஒருவர், காஷ்மீர் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு, இரண்டு மாதங்கள் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இந்த உண்மைச் சம்பவத்தையும், சத்யவான் - சாவித்ரி தொன்மக் கதையையும் இணைத்து உருவானது தான், ரோஜா படம்!

இப்படத்தின் வழியாகத் தான், ஆஸ்கர் நாயகன், இசையமைப்பாளர், ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகமானார். முதல் படத்திலேயே, தேசிய விருது பெற்றார். ஒலியில் இருந்த துல்லியத்தைக் கண்டு, இந்திய சினிமா உலகமே திகைத்தது.

புது வெள்ளை மழை... பாடல் துவக்கத்தில், பனி மலையை காட்டும் போது, ஒரு இசை வருமே... விழிகள், ஆச்சரியத்தில் விரிந்தன! இயக்குனர், மணிரத்னமும், தயாரிப்பாளராக, கே.பாலசந்தரும் இணைந்த, ஒரே படம் என்ற பெருமையும், இப்படத்துக்கு உண்டு.

சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில், காஷ்மீர் பனி மலை காட்சிகளின் போது, தியேட்டரில் ரசிகர்களுக்கு குளிர் அடித்தது. எழுத்தாளர் சுஜாதாவின் வசனம், நறுக் என்ற அளவில் இருந்தது. இப்படத்திற்கு, தேசிய விருதுகள் மூன்றும்; தமிழக அரசு விருதுகள் ஐந்தும் கிடைத்தன.இப்படம், ஹிந்தியிலும், டப்பிங் செய்யப்பட்டு, வெளியாகி, பெரும் வெற்றி பெற்றது.

தமிழ் படத்தைப் பார்த்து, வட மாநில சினிமாத் துறையினர் மிரண்டனர். மணிரத்னத்தின் இயக்குனர் பயணத்தில், படத்தின் உள்ளடக்கத்திலும் உருவாக்கத்திலும் மாற்றத்தை ஏற்படுத்திய படம் இது. இப்படத்திற்கு பின் தான், தேசிய அளவிலான பிரச்னைகளை, கையிலெடுக்கத் துவங்கினார்.

ருக்குமணி, சின்ன சின்ன ஆசை, காதல் ரோஜாவே, தமிழா தமிழா... போன்ற பாடல்கள், பட்டித் தொட்டி எங்கும் ஒலித்தன. பலருக்கு பாடம் கற்றுக்கொடுத்தது, ரோஜா!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - பாண்டியன்மறக்க முடியுமா? - பாண்டியன் மறக்க முடியுமா? - உருவம் மறக்க முடியுமா? - உருவம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in