Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டிசம்பருக்குள் பிக்பாஸ் : இந்தியன் 2வை முடிக்க கமல் திட்டம்

11 செப், 2020 - 13:38 IST
எழுத்தின் அளவு:
Soon-Indian-2-shooting

கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் முழுவீச்சில் இறங்கி விட்டார். இதற்கான புரமோசன் படப்பிடிப்புகள் முடிந்து பங்கேற்பாளர்கள் தேர்வு நடந்து வருகிறது. அடுத்த வாரத்தில் இருந்து படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்புகளும் விரைவில் தொடங்குகிறது.

அரசு தற்போது 75 பேருடன் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் இயக்குனர் ஷங்கர் குறைந்தபட்சம் 200 பேர் இல்லாமல் படப்பிடிப்பு நடத்த முடியாது என்று கூறிவிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் இந்தியன் 2வில் எனது சம்பந்தப்பட்ட காட்சிகளை டிசம்பருக்குள் எடுத்து முடித்து விடுங்கள் என்று ஷங்கருக்கும், தயாரிப்பு நிறுவனமாக லைக்காவுக்கும் கமல் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி, இந்தியன் 2 இவற்றில் ஒரே நேரத்தில் பணியாற்றி முடிக்க கமல் திட்டமிட்டிருக்கிறார். காரணம் அடுத்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் வருகிறது. கமலின் அரசியல் பயணத்தில் இந்த தேர்தல் மிக முக்கியமானதாகும். எனவே 2021 ஜனவரி முதல் சினிமா சம்பந்தப்பட்ட எந்த பணிகளும் இல்லாமல் முழுநேர அரசியலில் குதிக்க முடிவு செய்திருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பகத்சிங்கிற்கு நிகரானவர்: கங்கனாவுக்கு விஷால் பாராட்டுபகத்சிங்கிற்கு நிகரானவர்: ... 10 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் உஷா உதூப் 10 வருடங்களுக்கு பிறகு தமிழில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in