Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என் ஆயுளையும் சேர்த்து பாலுவிற்கு கொடு ஆண்டவா...! - சரோஜாதேவி

20 ஆக, 2020 - 14:30 IST
எழுத்தின் அளவு:
Sarojadevi-prays-for-SPB

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி. தென்னிந்திய மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தவர். எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் குணமாக வேண்டும் என ஆண்டவனை வேண்டுவதாக இவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சரோஜாதேவி வெளியிட்ட வீடியோவில், பாலுவிற்கு(எஸ்.பி.பாலசுப்ரமணியம்) உடல்நிலை சரியில்லை என கேள்விப்பட்டது மனம் சங்கடப்பட்டது. நல்ல மனிதர். ஒரு விழாவில் அவரிடம் நீங்கள் தேன் சாப்பிடுவீர்களா என்றேன். ஏன் அப்படி கேட்கிறீர்கள் என்றார். இல்லை உங்கள் குரல் இனிமையாக இருக்கிறது என்றேன். பதிலுக்கு அவர் நீங்களும் தான் அழகாக உள்ளீர்கள் என்றார். அவர் உடல்நலம் சரியில்லாமல் இருப்பதை கண்டு இந்தியாவே கவலை கொள்கிறது. என் ஆயுளையும் சேர்த்து அவருக்கு கொடு என ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன். அவர் நல்லபடியாக குணமாகி மீண்டும் வந்து பாடணும், ரொம்ப வருஷம் பாடணும் என்றார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
எஸ்.பி.பி.க்காக கூட்டுப்பிரார்த்தனை : பாடும் நிலா... எழுந்து வா! - ரஜினிஎஸ்.பி.பி.க்காக கூட்டுப்பிரார்த்தனை : ... 'கில்லி'யை முந்திய 'காஞ்சனா 3' 'கில்லி'யை முந்திய 'காஞ்சனா 3'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

ocean - Kadappa,இந்தியா
24 ஆக, 2020 - 13:57 Report Abuse
ocean ஏம்மா நீங்கள் பாஜகவில் இணைந்து நாட்டு மக்களுக்கு தங்களால் இயன்ற ஏதாவது நல்லதை செய்யுங்களேன்.தஙகளை வாழ வைத்த சென்னையில் தங்கி மக்களுக்கு நல்லது செய்யுங்கள்.
Rate this:
sivam - baghram,ஆப்கானிஸ்தான்
21 ஆக, 2020 - 10:36 Report Abuse
sivam ஜெனித்தன்றே, எல்லோரின் மரணிக்கும் நாளும் நேரமும் குறிப்புட்டு விடும், அதை அந்த படைத்தவனே வந்தாலும் திருத்தமுடியாது. கூட்டு பிரார்த்தனையில் செய்த பாவ புனியன்கள் கணக்கில் எடுக்கப்படும், அதைவைத்து சுபம்,, அசுபம் கணக்கிடப்படும்.
Rate this:
M.RAGHU RAMAN - chennai,இந்தியா
21 ஆக, 2020 - 10:30 Report Abuse
M.RAGHU RAMAN உங்கள் தியாக உணர்வை பாராட்டுகின்றேன். எஸ் பி பி ஒரு இதயக்கனி.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
21 ஆக, 2020 - 06:06 Report Abuse
 Muruga Vel பிறந்தவர் ஒரு நாள் பூவுலகை விட்டு செல்ல வேண்டும் என்பது உலக நியதி ..
Rate this:
அருணாசலம், சென்னை இவர்களது அலப்பறை முடியலடா சாமி.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in