Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கேஜிஎப் 2 படத்துக்கு புதிய சிக்கல்!

15 ஆக, 2020 - 14:48 IST
எழுத்தின் அளவு:
Toruble-for-KGF-2

2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான மாபெரும் வெற்றி பெற்ற கன்னடப் படம் கே.ஜி.எப். பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நாயகனாக நடித்திருந்த இந்தப் படம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டிருந்தது. விமர்சன ரீதியாக மட்டுமின்ரி வசூலிலும் சாதனை படைத்தது.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கபப்ட்டு வருகிறது. முதல் பாகத்தில் நடித்த யஷ் தான் இதிலும் நாயகனாக நடிக்கிறார். பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் 2-ம் பாகத்தில் வில்லனாக நடிக்கிறார். சமீபத்தில் சஞ்சய் தத்தின் பிறந்தநாளையொட்டி அவரின் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். அதில் சஞ்சய் தத்தின் கொடூரத் தோற்றம் நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தில் அவரது கதாபாத்திரம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகியது.

கேஜிஎப் 2ம் பாகம் படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிந்து விட்டது. இன்னும் இரண்டு சண்டைக்காட்சிகள் மட்டுமே உள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் மீதி காட்சிகளைப் படமாக்கி, படத்தை அக்டோபர் 23ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையில் தான் சஞ்சய் தத் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைக்காக வெளிநாடு சென்று விட்டார். நுரையீரல் புற்றுநோய் என்பதால் சில காலம் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கேஜிஎப் படப்பிடிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது

ஏனென்றால் இன்னும் படமாக்கப்பட வேண்டிய சண்டைக்காட்சி ஒன்றில் சஞ்சய் தத்தும் இருக்க வேண்டும். எனவே, சஞ்சய் தத் சிகிச்சை முடிந்து வரும் வரை படக்குழுவினர் காத்திருக்கப் போகிறார்களா அல்லது டூப் வைத்து அந்த சண்டை காட்சிகளை படமாக்கப் போகிறார்களா என்ற குழப்பம் உள்ளது.

இதனால் படம் திட்டமிட்டபடி அக்டோபர் 23-ந் தேதி ரிலீசாகுமா என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் ஒரு ஒயின் பாட்டில் மாதிரி.. : வனிதா விஜயகுமார்விஜய் ஒரு ஒயின் பாட்டில் மாதிரி.. : ... எஸ்.பி.பி., உடல்நிலை சீராக உள்ளது : எம்.ஜி.எம்., மருத்துவமனை எஸ்.பி.பி., உடல்நிலை சீராக உள்ளது : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in