Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சம்பளத்தில் ரஜினிகாந்த்தை மிஞ்சும் பிரபாஸ் ?

08 ஆக, 2020 - 17:15 IST
எழுத்தின் அளவு:
Prabhas-overtakes-Rajini

இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் சல்மான் கான், ஆமீர்கான், அக்ஷய்குமார் ஆகியோர் முதல் மூன்று இடங்களில் இருக்கிறார்கள்.

தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் தமிழ் சினிமா நடிகரான ரஜினிகாந்த்தான் அதிக சம்பளம் வாங்குவதாக இதுவரை சொல்லி வந்தார்கள். ரஜினிகாந்த் அதிகபட்சமாக 60 அல்லது 70 கோடி வரை வாங்குவதாகத்தான் தகவல்.

ஆனால், மாஸ்டர் படத்தில் விஜய்யின் சம்பளம் 80 கோடி ரூபாய் என்று சொல்லப்பட்டது. இருப்பினும் அது உறுதியான தகவலா என்று தெரியவில்லை. அப்படம் விஜய்யின் உறவினர் தயாரிக்கும் படம் என்பதால் அப்படி ஒரு கணக்கைக் காட்டுகிறார்கள் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். இன்னமும் ரஜினிகாந்த் சம்பளத்தை விஜய் கடக்கவில்லை என்றுதான் சொல்கிறார்கள்.

இதனிடையே, பாகுபலி நடிகரான பிரபாஸ் மகாநடி இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிக்க உள்ள அவருடைய 21வது படத்திற்கு சுமார் 70 கோடி வரை சம்பளமாகக் கேட்டுள்ளதாக டோலிவுட்டில் சொல்கிறார்கள். மேலும், தென்னிந்திய மொழிகளில் படத்தை டப்பிங் செய்து விற்கும் உரிமையிலும் அவருக்குப் பாதி கொடுத்துவிட வேண்டுமாம். அதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் 100 கோடி தாண்டும் என்கிறார்கள்.

இப்படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடிப்பதற்கு தீபிகா படுகோனே சுமார் 20 கோடி வரை கேட்டுள்ளதாகத் தகவல். அதே சமயம் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் கேட்ட 5 கோடி ரூபாய் சம்பளத்தைக் கூட படக்குழு யோசிப்பதாக ஒரு தகவல் வெளியானது. படத்தின் பட்ஜெட் மட்டுமே 400 கோடி ரூபாயாம். அதில் சம்பளமாகவே 200 கோடி வரை போய்விடும். இதெல்லாம் படத்திற்காக வேண்டுமென்றே அள்ளிவிடுகிற பில்ட்அப்பாக இருக்கும் என்று கூட ஒரு பேச்சு அடிபடுகிறது. சினிமாவில் எதையும் இப்படி டபுளாகப் பேசுவது வழக்கம்தான்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
சிலரால் சாக்கடை ஆகும் சமூக வலைத்தளங்கள்சிலரால் சாக்கடை ஆகும் சமூக ... ஸ்ருதியின் எட்ஜ் ஆல்பம் ஸ்ருதியின் எட்ஜ் ஆல்பம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

PANDA PANDI - Aththipatti,இந்தியா
09 ஆக, 2020 - 09:16 Report Abuse
PANDA PANDI ...என்றுதான் சொல்கிறார்கள்...என்றுதான் சொல்கிறார்கள். உறுதி இல்ல செய்திகள். VIJAY 100 வாங்குகிரர் என்று தான் சொல்கிறார்கள் என்று சொல்லவேண்டியதுதானே.. ம்ம்ம்.. பிரபாஸுக்கு போனாலும் பரவாயில்லை. விஜய்க்கு.. என்றுதான் சொல்கிறார்கள்.பட்டம் போகக்கூடாது என்ற எண்ணம் நன்றோ தமிழா.. ஹ ஹா ஹா. முடியல உன் திருவிளையாடல். WAITING FOR THE DAY.
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
09 ஆக, 2020 - 06:26 Report Abuse
Mani . V சம்பளம் கூட வாங்கிட்டா ஆச்சா? நேரடி முதல்வர் ஆகும் தகுதி எங்களின் சூப்பர் ஸ்டாருக்கு மட்டுமே உண்டு.
Rate this:
bahubali -  ( Posted via: Dinamalar Android App )
08 ஆக, 2020 - 20:53 Report Abuse
bahubali perfect wig
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in