Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா

05 ஆக, 2020 - 13:35 IST
எழுத்தின் அளவு:
Singer-SPB-tested-as-corona-positive

கொரோனாவால் திரைப்பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் (74) இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், கடந்த இரண்டு மூன்று நாட்களாக என் உடல்நிலை சரியில்லை. காயச்சல், சளி போன்ற தொல்லைகள் இருந்தன. இதை எளிதாக எடுத்து கொள்ள விரும்பவில்லை. உடனடியாக மருத்துவமனை சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டேன். லேசாக கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்தனர். வீட்டில் இருந்தபடியே தனிமைப்படுத்தி கொண்டு மருந்துகளை எடுத்து கொள்ள அறிவுறுத்தினார்கள். ஆனால் எனக்கு அப்படி செய்ய மனமில்லை. குடும்பத்தினர் நலன் கருதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.

மருத்துவர்கள் நன்றாக பார்த்து கொள்கிறார்கள். நான் நன்றாக இருக்கிறேன். யாரும் கவலைப்பட தேவையில்லை. யாரும் என்னை தொடர்பு கொண்டு நான் எப்படி இருக்கிறேன் என தெரிந்து கொள்ள வேண்டாம். காய்ச்சல் குறைந்து வருகிறது. சளி தொற்று மட்டுமே உள்ளது. இரண்டொரு நாளில் நானே வீடு திரும்பிவிடுவேன். நிறைய பேர் எனக்கு போய் செய்து நலம் விசாரிக்கிறார்கள். பலரது அழைப்புகளை என்னால் எடுக்க முடியவில்லை. இப்போது நன்றாக ஓய்வு தேவைப்படுகிறது. உங்களின் அனைவரின் அன்புக்கும் நன்றி. நான் நலமாக உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட ஏராளமான மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி உள்ளார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
தமிழில் வெளிவரும் விஜய்சேதுபதியின் மலையாள படம்தமிழில் வெளிவரும் விஜய்சேதுபதியின் ... இன்ஸ்டாகிராமில் ரகுல் ப்ரீத்திற்கு 15 மில்லியன் பாலோயர்கள் இன்ஸ்டாகிராமில் ரகுல் ப்ரீத்திற்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

Ashanmugam - kuppamma,இந்தியா
06 ஆக, 2020 - 11:38 Report Abuse
Ashanmugam நீடுழி நீண்ட காலம் கோரோனாவில் இருந்து மீட்டு இவ்வுலகில் நீங்கா புகழுடன் தேக ஆரோக்கியத்துடன் நலமுடன் என்றென்றும் வாழ்க வாழ்க வாழிய வாழியவே.
Rate this:
thamodaran chinnasamy - chennai,இந்தியா
06 ஆக, 2020 - 10:51 Report Abuse
thamodaran chinnasamy நண்பர் S P B அவர்கள் நலம்பெற இறைவனைப்பிரார்த்திப்போம். ஸ்ரீராம் ஜெயராம் ஜெயா ஜெயா ராம்.
Rate this:
Arun Pradeep - Chennai,இந்தியா
06 ஆக, 2020 - 10:34 Report Abuse
Arun Pradeep நலம் பெற எனது மனமார்ந்த பிரார்த்தனைகள்.
Rate this:
M.Sam - coimbatore,இந்தியா
06 ஆக, 2020 - 07:53 Report Abuse
M.Sam nallam பெற பிராத்திக்கிறேன்
Rate this:
06 ஆக, 2020 - 07:36 Report Abuse
chandran, pudhucherry நலம் பெற வாழ்த்துக்கள்
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in