Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஜெயராமை கண்டு பிரமித்த சிரஞ்சீவி

29 ஜூலை, 2020 - 13:14 IST
எழுத்தின் அளவு:
Chiranjeevi-praises-Jayaram

நடிகர் ஜெயராம் கடந்த இரண்டு வருடங்களாக கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரோ இல்லையோ தான் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்துவருகிறார். அந்த வகையில் தற்போது சைலண்டாக நமோ என்கிற சமஸ்கிருத படத்திலும் நடித்து முடித்துவிட்டார். விஜீஷ் மணி என்பவர் இயக்கத்தில் புராண படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் கிருஷ்ணரின் நண்பன் குசேலன் ஆக நடித்துள்ளார் ஜெயராம்.

ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் மொட்டை தலையுடன் மெலிந்த உடலுடன் கைகளைக் கூப்பியபடி ஜெயராம் அமர்ந்திருக்கும் காட்சி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. தற்போது இந்தப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ள நடிகர் சிரஞ்சீவி, ஜெயராமின் இந்த உருவ மாற்றத்தை கண்டு பிரமித்து போயுள்ளார். ஜெயராமை புகழ்ந்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஜெயராமின் நடிப்பு மற்றும் அவரது உருவ மாற்றம் கண்டு பிரமித்து போனேன்.. சகோதரர் ஜெயராம் இந்தப்படம் மூலம் ரசிகர்களின் இதயத்தை மட்டுமல்ல பல விருதுகளையும் வெல்வார் என்பது உறுதி” என மனம் திறந்து பாராட்டியுள்ளார் சிரஞ்சீவி.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மருத்துவமனை வாசலிலேயே தடுக்கப்பட்ட சரத்குமார் பட நடிகைமருத்துவமனை வாசலிலேயே தடுக்கப்பட்ட ... தெலுங்கு நடிகர் ராவி கொண்டலா காலமானர் தெலுங்கு நடிகர் ராவி கொண்டலா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

பஞ்ச்மணி - கோவை,இந்தியா
31 ஜூலை, 2020 - 18:58 Report Abuse
பஞ்ச்மணி செய்யறதை திருந்த செய்வது என்பது சேட்டன்களுக்கு தொட்டில் பழக்கம் இங்க டுமீலன்ஸ்ஸூக்கு நாலு குத்து பாட்டு 8 பைட் இருந்தால் படம் சூப்பர்ன்னு மார்தட்டுவான் அங்க கதைக்கு முக்கியதுவம் குடுப்பாங்க அவங்களுக்கு போர் அடிக்முல்ல அதுக்காக நம்ப தமிழ் படம் தமிழ் மசாலா மாதரி ஒரு படத்தை மலையாளத்தில் எடுத்தால் படம் 2 நாள் தியேட்டரில் இதை நான் கண்டது
Rate this:
thulakol - coimbatore,இந்தியா
31 ஜூலை, 2020 - 17:55 Report Abuse
thulakol வாழ்த்துக்கள் திரு ஜெயராம் அவர்களே
Rate this:
Enrum anbudan - dammam,சவுதி அரேபியா
30 ஜூலை, 2020 - 23:02 Report Abuse
Enrum anbudan வாழ்த்துக்கள் மிஸ்டர் ஜெயராம் .
Rate this:
S. Narayanan - Chennai,இந்தியா
30 ஜூலை, 2020 - 18:59 Report Abuse
S. Narayanan ஜெயராம் மிகவும் பண்புள்ள மனிதர். அவர் ஏற்ற கதா பாத்திரமும் அவருக்கு நிச்சயம் புகழ் சேர்க்கும்.
Rate this:
MANI DELHI - Delhi,இந்தியா
30 ஜூலை, 2020 - 12:42 Report Abuse
MANI DELHI சொன்னவர் ஆந்திர மாநிலத்தை சார்ந்தவர். நடித்தவர் கேரளா மாநிலத்தை சார்ந்தவர். இரு மாநிலங்களிலும் சமஸ்க்ருதத்திற்கு நல்ல ஆதரவு உண்டு. ஏனென்றால் இரு மாநிலங்களிலும் கடவுள் நம்பிக்கை மற்றும் பக்தி வெகுவாக கொண்டாட படுகிறது. திராவிடம் பேசும் டுமீளர்களுக்கு இது புரியாத சப்ஜெக்ட்.
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in