Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எப்பவுமே ரஜினி தான் மாஸ்டர்: விஜய் சேதுபதி

11 ஜூலை, 2020 - 14:12 IST
எழுத்தின் அளவு:
Rajini-is-always-master-says-Vijaysethupathi

கொரோனா ஊரடங்கால் சமூகவலைதளப் பக்கங்கள் வாயிலாக ரசிகர்களுடன் திரையுலகைச் சேர்ந்தவர்கள் உரையாடி வருகின்றனர். அந்தவகையில் இணையதள கலந்துரையாடலில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி, தனது சினிமா அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

அப்போது ரஜினி பற்றி பேசுகையில், “ரஜினியை பார்த்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவலில் பேட்ட படத்தில் நடித்தேன். அவர் மிகவும் சுறுசுறுப்பானவர். ஒரு காட்சியில் எப்படி நடிக்க போகிறோம். திரையில் அது எப்படி வரும்.

ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற விவரங்களையெல்லாம் தெரிந்து வைத்து இருப்பார். ஒரு சாதாரண காட்சியையும் சிறப்பானதாக மாற்றி விடுவார். ஒரு காட்சி நன்றாக வந்துவிட்டால் இயக்குனரை பாராட்டுவார். ஒவ்வொரு காட்சியையும் அழகாக யோசித்து ரசித்து செய்கிறார். சுற்றி இருக்கும் நடிகர்களையும் கவனிப்பார். இன்றைக்கு மட்டுமல்ல என்றுமே அவர் மாஸ்டர்தான்” என விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

மேலும், ““கதாநாயகனாகும் முன்பு தெருவில் யாருக்கும் தெரியாத சாதாரண ஆளாக சுற்றினேன். அதன்பிறகு நடிகனானேன். எனவே கதாநாயகன் என்ற இமேஜில் சிக்க விரும்பவில்லை. அதில் சிக்கினால் வெளியே வர முடியாது. கதாநாயகன் இமேஜில் சிக்க கூடாது என்றுதான் சூதுகவ்வும் படத்தில் நடித்தேன். நான் நடித்த 96 படம் இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என்று நினைக்கவில்லை. அந்த படத்தில் நடித்த மாதிரியே நிஜ வாழ்க்கையிலும் பள்ளி கல்லூரியில் படித்த போது எனக்கு கூச்ச சுபாவம் இருந்தது. 96 படத்தின் கதையில் ஜீவன் இருந்ததால் பெரிய வெற்றி பெற்றது” என அவர் தனது பட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய ரோஜாஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் ... ரஜினி ஒரு கடவுள்.. விஜய் பணிவானவர்.. சூர்யா ஒரு ஜென்டில்மேன் - பிருந்தா ரஜினி ஒரு கடவுள்.. விஜய் பணிவானவர்.. ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

KavikumarRam - Indian,இந்தியா
13 ஜூலை, 2020 - 17:50 Report Abuse
KavikumarRam ரஜினி இந்த மாதிரி அரைவேக்காடுகளை விட்டு தள்ளி நிற்பது அவரது நற்பெயருக்கு நல்லது. ஏற்கனவே கபாலி, காலா ன்னு ஒரு அரைவேக்காடு கூட சேந்து நாசமானது தான் மிச்சம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in