Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என்னை வாழ வைத்த தெய்வம் கே.பாலசந்தர் - ரஜினி புகழாரம்

09 ஜூலை, 2020 - 18:35 IST
எழுத்தின் அளவு:
Rajini-praises-K-Balachander

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் 90வது பிறந்த தினம் இன்று. இவரால் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்ட கலைஞர்கள் ஏராளம். அதில் முக்கியமானவர் இன்றைக்கு மக்கள் சூப்பர் ஸ்டார் என கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்த். தன் குருநாதரின் பிறந்தநாளை முன்னிட்டு ரஜினி வெளியிட்ட வீடியோ...

என் குருநாதர் கே.பி அவர்களின் 90வது பிறந்தநாள் இன்று. ஒருவேளை அவர் என்னை அறிமுகப்படுத்தவில்லை என்றால் கூட நான் நடிகராகி இருப்பேன். கன்னடத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து சிறு நடிகராக இருந்திருப்பேன். ஆனால் இன்றைக்கு ஆண்டவன் புண்ணியத்தில் பெயர், புகழ், வசதியான வாழ்க்கை வாழ காரணமே அவர் தான். என்னை அவர் தேர்வு செய்து, எனக்குப் பெயர் வைத்து, என் குறைகளை நீக்கி, என்னிடமுள்ள நிறைகளை எனக்கே காட்டிக்கொடுத்து. என்னை ஒரு முழு நடிகனாக்கி, நாலு படங்களில் நல்ல கதாபாத்திரங்கள் கொடுத்து, ஒரு நட்சத்திரமாக என்னை தமிழ் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தினார்.

அப்பா, அம்மா, என்னை வளர்த்து ஆளாக்கிய என் அண்ணன், பாலசந்தர் ஆகிய நால்வரும் எனக்கு தெய்வங்கள். எனக்கு மட்டுமல்ல, எத்தனையோ நடிகர், நடிகைகளுக்கு வாழ்க்கை கொடுத்துவர். தன் வாழ்நாளில் படம் இயக்கி, தயாரித்து சின்னத்திரையிலும் ஈடுபட்டு லட்சக்கணக்கானோருக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித் தந்தார். எத்தனையோ இயக்குனர்களிடம் வேலை பார்த்துள்ளேன். ஆனால் கே.பி., செட்டுக்குள் வந்தால் நடிகர்கள் முதல் லைட்மேன் வரை எழுந்து நின்று வணக்கம் சொல்வார்கள். அந்த கம்பீரம் அவரிடம் இருந்தது. மகனாக, தந்தையாக, கணவனாக, இயக்குநராக, எல்லாவற்றையும் கச்சிதமாக செய்தார். இன்னும் நிறைய நாட்கள் அவர் வாழ்ந்திருக்கலாம்.

இவ்வாறு ரஜினி கூறி உள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
'டுவிட்டரில்' இணைந்த நடிகை!'டுவிட்டரில்' இணைந்த நடிகை! இந்திய சினிமாவின் முக்கியமான மகன் பாலசந்தர் - கமல் புகழஞ்சலி இந்திய சினிமாவின் முக்கியமான மகன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

10 ஜூலை, 2020 - 12:45 Report Abuse
Kalyanaraman திரு.KB அவர்களின் 100வது படம் பார்த்தாலே பரவசம். அதில் கமலையும் உன்னையும் மாதவன் திருமணக் காட்சியில் நடிக்க வைக்க விரும்பிக் கேட்டார். கமல் உடனே நடித்துக் கொடுத்தார். ஆனால், அண்ணன் என்ன செஞ்சீங்க? நன்றி கெட்ட மனிதன் நீ. இப்போ தெய்வம் அப்படி இப்படின்னு டயலாக் விடுறே. சினிமாவை விட நிஜத்தில் நல்லாவே நடிக்கிறே.
Rate this:
09 ஜூலை, 2020 - 20:19 Report Abuse
rasheed ரஜினி மிகவும் மதிக்கும் டைரக்டர் இனி மேல் இப்படி வருவார்களா வாழ்த்துக்கள் ரஷீத்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in