Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காலம் பதில் சொல்லும் : புகார்களுக்கு பார்வதி ரியாக்சன்

08 ஜூலை, 2020 - 18:43 IST
எழுத்தின் அளவு:
Parvathy-reaction

கடந்த சில தினங்களாக மலையாள சினிமாவில் உள்ள பெண்கள் நல அமைப்பு மீது தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.. இதுவரை அப்படி குற்றச்சாட்டுகளை கூறியுள்ள இரண்டு பெண்களும் அதில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் தான்.

கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு மலையாள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு துன்புறுத்தபட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். அவரை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என பார்வதி, ரம்யா நம்பீசன், ரீமா கலிங்கல் உள்ளிட்ட சில நடிகைகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து நடிகர் சங்கத்திலிருந்து விலகி 2017ல் சினிமா பெண்கள் நல அமைப்பு ஒன்றையும் துவங்கினார்கள். இதில் பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் சிலரும் இணைந்தனர்.

இந்த அமைப்பில் தான் சக கலைஞர்கள் மீது பாரபட்சம் காட்டப்படுவதாகவும், சீனியரான ஒரு சிலர் சாதாரண கலைஞர்களை மிரட்டுவது போன்ற அதிகார தோரணையுடன் நடந்து கொள்கிறார்கள் என்றும் இயக்குனர் விது வின்சென்ட் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஸ்டெபி ஜோசப் ஆகியோர் குற்றம் சாட்டியிருந்தனர்.

இதுபற்றி தனது Iவிட்டர் பக்கத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நடிகை பார்வதி பதில் அளித்துள்ளார். “சினிமா பெண்கள் நல அமைப்பில் அனைவருக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மிகவும் கவுரமான முறையில் அனைவரையும் கலந்தாலோசித்தே முடிவுகள் எடுக்கப்படுகின்றன.. இப்போது திடீரென கூறப்படும் குற்றச்சாட்டுக்களை குறித்து கேட்டால், பெண்களுக்கு எதிராக ஆண்கள் நடத்தும் விளையாட்டு உங்களுக்கு தெரியாதா என்ன..? எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும்” என பதில் கூறியுள்ளார் பார்வதி.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சுதா இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம்சுதா இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம் ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

sankaseshan - mumbai,இந்தியா
09 ஜூலை, 2020 - 18:22 Report Abuse
sankaseshan சேட்டன் சேச்சிகளுக்குமிடையே இவ்வளவு உரசலா? படித்தவர்கள் அதிகம் உள்ள மாநிலம் இப்படித்தான் இருக்கும் போல
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in