Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கவிஞர் கா.மு.ஷெரீப் 27வது நினைவு நாள்: வாய்ப்பு கேட்காத கவிஞர்

07 ஜூலை, 2020 - 12:25 IST
எழுத்தின் அளவு:
Lyricist-Ka.Mu.Sheriffs-27th-dead-anniversary-today

பழம்பெரும் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் கா.மு.ஷெரீபின் 27வது நினைவு நாள் இன்று. அவரைப் பற்றிய சில சுவையான நினைவுகள்...1914ம் ஆண்டு கீழத் தஞ்சை மாவட்டம் அபிவிருத்தீஸ்வரம் என்ற கிராமத்தில், காதர்ஷா ராவுத்தர்-பாத்துமா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார் ஷெரீப். 5 வயது முதல் 14 வயதுவரை ஆசிரியர் ஒருவரிடம் தமிழ் கற்றார். இலக்கணத்தையும் இலக்கியங்களையும் கற்றார். சிறுவனாக இருந்தபோதே கவிதை இயற்றும் திறன் பெற்றிருந்தார்.

நிறைய நூல்களை எழுதி, பதிப்பகம் நடத்தி, பத்திரிகை ஆசிரியராக பணியாற்றிய ஷெரீப். திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமானார். 400க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார். அவரது முதல் பாடல் இடம்பெற்ற படம் 'பொன்முடி'.

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?, வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா, பணம் பந்தியிலே குணம் குப்பையிலே, நான் பெற்ற செல்வம் நலமான செல்வம், ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே, ஒன்றுசேர்ந்த அன்பு மாறுமா உண்மைக் காதல் மாறிப்போகுமா?, அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை, பொன்னான வாழ்வு மண்ணாகிப் போமா, உலவும் தென்றல் காற்றினிலே, போன்ற பல பாடல்கள் இன்னும் ரசிகர்களின் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. பெண் தெய்வம், புது யுகம் படங்களுக்கு வசனத்தையும் எழுதினார்.

கவிஞர் கா.மு.ஷெரீப் ஏன் மற்ற கவிஞர்களிடமிருந்து வித்தியாசப்படுகிறார் தெரியுமா, அவர் யாரிடமும் வாய்ப்பு கேட்டு நின்றதில்லை, பாடல்களுக்கு இவ்வளவு சம்பளம் கொடுங்கள் என்று கேட்டதில்லை. இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அசைவம் உண்பதில்லை. மொத்தத்தில் சினிமா பாடலாசிரியராக இருந்தாலும் கடைசி வரை அவர் ஒரு சினிமாக்காரராக இருந்ததில்லை.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
'நிர்வாணமாகவும் நடிப்பேன்!'நிர்வாணமாகவும் நடிப்பேன்! முழுநேர நடிகரான தயாரிப்பாளர் முழுநேர நடிகரான தயாரிப்பாளர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

07 ஜூலை, 2020 - 16:16 Report Abuse
rasheed இப்படி அறிய தகவல் எங்களுக்கு கொடுத்து ரொம்ப நன்றி ஷெரிஎப் நல்ல மனிதர் கவிஞர் இன்னும் தகவல் கொடுக்கலாம் நன்றி
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
07 ஜூலை, 2020 - 13:40 Report Abuse
Bhaskaran ஆரம்பகாலங்களில் தமிழரசுக்கட்சியில் தீவிரமாக இருந்தார் .பின்னாட்களில் அறிவாலயத்துகு வந்துபோவதை பார்த்திருக்கிறேன்
Rate this:
Sai - Paris,பிரான்ஸ்
07 ஜூலை, 2020 - 16:39Report Abuse
Saiathu kalaignarudanaana sinimaa sagotharathuvam...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in