Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் : பூர்ணா வேண்டுகோள்

30 ஜூன், 2020 - 17:54 IST
எழுத்தின் அளவு:
Poornas-request

சினிமாவில் நடிக்க வைப்பது, தொழில்களில் முதலீடு செய்வது தொடர்பாக நடிகைகள் சிலர் ஏமாற்றப்பட்ட விஷயம் பலமுறை நடந்துள்ளது. ஆனால் முதன்முறையாக திருமணம் செய்து கொள்ளுவதாக மோசடிக் கும்பல் ஒன்று ஒரு நடிகையை ஏமாற்ற முயற்சித்து இருக்கிறார்கள் என்றால் அதில் சிக்கியவர் நடிகை பூர்ணாவாகத் தான் இருக்கும்... ஒருகட்டத்தில் சுதாரித்து இதை கண்டறிந்த பூர்ணாவின் குடும்பம், போலீஸில் அளித்த புகாரின் பேரில் இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஐதராபாத்திற்கு படப்பிடிப்பிற்காக சென்றிருந்த பூர்ணா நேற்று கேரளா திரும்பினார். இன்று சிறப்பு விசாரணை குழுவினரிடம் தனது வாக்குமூலத்தை அளித்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. இதையடுத்து தனது முகநூல் பக்கத்தில் நன்றியும் வேண்டுகோளும் கலந்த பதிவொன்றை இட்டுள்ளார் பூர்ணா..

அதில், “இந்த பிரச்சனையின்போது ஆதரவாக இருந்த என் நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு நன்றி. எனது வழக்கு தொடர்பாக சில ஊடகங்களில் வெளியான சில உண்மையற்ற செய்திகளை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த மிரட்டல் கூட்டத்தில் ஒரு பகுதியாக இருக்கும் குற்றவாளி மற்றும் அந்த கும்பலை பற்றி எனக்கு தெரியாது.. எனவே என்னை குற்றவாளியுடன் தொடர்புபடுத்தும் போலியான செய்திகளை பரப்ப வேண்டாம் என அனைத்து ஊடக நண்பர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

திருமண சம்பந்தம் என்கிற பெயரில் போலி பெயர்கள், போலி முகவரிகள், மாற்று அடையாளங்களுடன் எங்களை முற்றிலும் தவறாக வழிநடத்தி எங்களை ஏமாற்றியதால் தான் என் குடும்பம் புகார் கொடுக்க முடிவு செய்தது.. அதுதான். இறுதியில் அவர்களின் மிரட்டலுக்கும் வழிவகுத்தது, அதன்பிறகே நாங்கள் காவல்துறையை அணுகி சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்தோம். இந்த திருமண சம்பந்தம் மூலம் அவர்களின் நோக்கம் என்னவாக இருந்ததோ எங்களுக்குத் தெரியாது.

எனது புகாருக்குப் பிறகு தற்போது, கேரள போலீஸ் துரிதமாக வேலை செய்து, அனைத்து குற்றவாளிகளையும் கண்டுபிடித்து விட்டனர்.. எனவே விசாரணை முடியும் வரை என் குடும்பம் மற்றும் என் தனிப்பட்ட விஷயங்கள் குறித்த செய்திகளில் எல்லை மீற வேண்டாம் என அனைத்து ஊடக நண்பர்களையும் கேட்டுக் கொள்கிறேன். நான் நமது குற்றவியல் நீதி அமைப்பின் மீது முழுமையான நம்பிக்கை வைத்திருக்கிறேன். வழக்கு முடிந்ததும் நானே ஊடகங்களை சந்திப்பேன். மேலும் என் விஷயத்தை கவனத்தில் கொண்டாவது, என் சக சகோதரிகள் இதுபோன்ற மோசடி நபர்களிடம் கொஞ்சம் விழிப்புடன் இருப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார் பூர்ணா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மோசடி கும்பலுடன் எனக்கு தொடர்பில்லை ; காமெடி நடிகர் வாக்குமூலம்மோசடி கும்பலுடன் எனக்கு தொடர்பில்லை ... ஹுமா குரேஷிக்கும் ஷாக் கொடுத்த  மின்சார கட்டணம் ஹுமா குரேஷிக்கும் ஷாக் கொடுத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in