Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

3வது திருமண சர்ச்சை : 'உங்க வேலைய பாருங்க' என லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வனிதா பதிலடி

29 ஜூன், 2020 - 18:52 IST
எழுத்தின் அளவு:
Vanitha-wedding-with-Peter-:-Lakshmi-Ramakrishnan-tweet---Vanitha-angry-reply

நடிகை வனிதா விஜயகுமாரின் முதல் இரண்டு திருமணங்கள் தோல்வியில் முடிந்த நிலையில், மூன்று குழந்தைகள் உள்ள சூழலில் சனிக்கிழமை அன்று பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்தார். மறுநாளே பீட்டர் பாலின் மனைவி ஹெலன், தனக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், தனக்கு விவாகரத்து கொடுக்காமலே பீட்டர் பால் இப்போது திருமணம் செய்ததாக சென்னை வட பழனி போலீசில் புகார் அளித்துள்ளார். இதை சட்டரீதியாக எதிர்கொள்ள தயார், இது எதிர்பார்த்த ஒன்று தான், தன்னிடம் ஒரு கோடி பணம் பறிக்கவே ஹெலன் இப்படி செய்துள்ளார் என்றார் வனிதா.

இந்நிலையில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் டுவிட்டரில், ''பீட்டர் பாலுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். அவர் இன்னும் விவாகரத்து பெறவில்லை. படித்தவர்களே எப்படி இந்த தவறை செய்கிறீர்கள். வனிதாவை திருமணம் செய்து முடிக்கும் வரை ஏன் பீட்டரின் முதல் மனைவி புகார் அளிக்கவில்லை, திருமணத்தை நிறுத்தவில்லை. வனிதா கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டவர். இந்த உறவாவது அவருக்கு நல்ல விதமாக அமையும் என நினைத்தேன். ஆனால் இந்த பிரச்னையை அவர் கவனிக்காதது வருத்தமளிக்கிறது. அதிகாரத்துக்கான முழு அர்த்தத்தை பெண்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் எதுவும் மாறப்போவதில்லை'' என பதிவிட்டார்.

இந்த பதிவை பார்த்து கோபமான வனிதா டுவிட்டரில், ''உங்கள் டுவீட்டை நீக்குங்கள். உங்க வேலையை மட்டும் பாருங்கள். இது பிக்பாஸ் நிகழ்ச்சியோ அல்லது குடும்பத்தை கெடுக்கும் உங்களின் நிகழ்ச்சியோ அல்ல. நான் படித்தவள். யாருடைய ஆதரவுமின்றி என் வாழ்க்கையை என்னால் பார்த்துக் கொள்ள முடியும். என் முடிவுகளுக்கு உங்களின் ஆதரவோ, அங்கீகாரமோ அவசியமில்லாதது. இதிலிருந்து தள்ளியே இருங்கள். இது ஒன்றும் பொது பிரச்னையோ அல்லது உங்களின் நிகழ்ச்சியோ கிடையாது'' என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (31) கருத்தைப் பதிவு செய்ய
என்ன ஒரு முட்டாள்தனமான செயல் - எஸ்பிபி கோபம்என்ன ஒரு முட்டாள்தனமான செயல் - ... நிர்வாண போஸ்டரை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய அல்லரி நரேஷ் நிர்வாண போஸ்டரை வெளியிட்டு பரபரப்பை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (31)

r.sundaram - tirunelveli,இந்தியா
02 ஜூலை, 2020 - 14:50 Report Abuse
r.sundaram இதுஒன்றும் பொது பிரச்சனை அல்ல.
Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
01 ஜூலை, 2020 - 11:02 Report Abuse
Sridhar எதுக்கு கல்யாணம் செஞ்சுக்கணும்? நம்ம கமலகாசன் கிட்டே கேட்டா நல்ல ஐடியா கொடுப்பாரே? பாக்கப்போனா, சினிமாக்காரங்களுக்கு கல்யாணமே தேவையில்லை.
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
01 ஜூலை, 2020 - 09:11 Report Abuse
skv srinivasankrishnaveni சிங்கிளாவ இருந்து மரியாதையுடன் தன்பிள்ளைகளை எல்லாம் மெழுக்குகொண்டுவந்த பெண்களை நான் பாத்துண்டேஇருக்கேன் ஒத்த குலந்தியோ பழகுலந்திகளோ எப்படியோ நாலுவீட்டுலே வேலைகள் செய்தும் அல்லது படிப்பு இருந்தால் நல்ல வேலைக்குபோயிட்டு தன குழந்தைகளை எல்லாம் மேலுக்கு நல்ல வேலைக்கு போகும் அளவுக்கு தியாகம் செய்து வாழும் பொண்ணுகளும் இருக்காங்க ஓயாமல் குடிச்சு மனைவியை அடிச்சு உதைச்ச கணவனை விட்டுவிலகினால் கூட தன மக்களை கண்ணாக கவனிச்சு மேலுக்குவரும் பெண்ணுகளும் இருக்காங்க மிடில்கிளாஸ்லே எல்லாம் நடக்காத கூத்தா என்று இந்த பொண்ணுகேக்குதாம் சீ வாயைமூடு என்று சொல்லி ஒரு அரை விடணும்போல ஆத்திரம் வரது .இவளுக்கு வயசு ௪௦+தேவையா இந்த குப்பத்தனம் குப்பத்துலே தான் சகஜம்னு சொல்றாங்க இந்த அநாகரீகம் வீட்டுலே வேலைக்குவரும்பொம்பளைங்கள் எல்லாம் ய்வமாதிரி என்று என்னுரா ப்போல பேசுது , ஒரு பொண்ணு தானும் வாழாமல் காசுக்குவேண்டி எதுவும் கூத்துக்காட்டுவாளுக என்பது சினி பீல்டுக்குலே சகஜம் , போனால்போட்டும் அடுத்துவரப்போறன் ஒரு முஸ்லீம் அப்போது முஸ்லிமாக மாறிடும்மா உனக்கெல்லாம் கற்பாவது கஸ்மாலமாவது
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
01 ஜூலை, 2020 - 07:02 Report Abuse
meenakshisundaram 'யாருடைய ஆதரவுமின்றி என் வாழ்க்கையை பார்த்துக்கொள்ளத் தெரிந்தவளா இப்படி ஒவ்வொரு ஆண் பின்னாலே போகணும் -ஏதோ கிடைச்சதை அனுபவின்னு சொல்றமாதிரி இல்லா இருக்கு ?
Rate this:
THENNAVAN - CHENNAI,இந்தியா
30 ஜூன், 2020 - 12:45 Report Abuse
THENNAVAN அவங்க அவங்க காஸ்டெம் மற்றவர்களுக்கு அடுத்தவர்களுக்கு எப்படி புரியும்.
Rate this:
மேலும் 26 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in