Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டார்ச்சர் செய்கிறார்கள்.. காப்பாற்றுங்கள்: முதல்வரிடம் அவசர உதவி கோரும் டேனி

29 ஜூன், 2020 - 16:26 IST
எழுத்தின் அளவு:
Biggboss-fame-Daniel-asks-helps-from-CM

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ரங்கூன், மரகத நாணயம் உள்பட பல தமிழ்ப் படங்களில் காமெடி வேடங்களில் நடித்தவர் டேனி. பிக்பாஸ் சீசன் 2 மூலம் மக்களிடம் மேலும் பிரபலமானார். அந்தப் போட்டியில் இருந்து வெளியேறிய சில நாட்களிலேயே தனது காதலியைத் திருமணம் செய்து கொண்டார்.

இந்தத் தம்பதிக்கு நேற்று அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் டேனி மகிழ்ச்சியுடன் பதிவு செய்திருந்தார். ஆனால், இந்தப் பதிவை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே தங்கள் குடும்பத்தை கார்ப்பரேஷன் அலுவல அதிகாரிகள் கொடுமைப்படுத்துவதாக பரபரப்பு புகார் ஒன்றையும் டுவிட்டரில் அவர் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக முதல்வரையும், சுகாதாரத்துறை அமைச்சரையும் டேக் செய்து வெளியிட்டுள்ள அந்தப் பதிவில், வளசரவாக்கம் பகுதியில் உள்ள கார்ப்பரேஷன் அலுவலகத்தைச் சேர்ந்த அலுவலர்கள் தங்களுடைய குடும்பத்தை மிகவும் டார்ச்சர் செய்து வருவதாகவும், அவர்கள் மிகவும் மோசமாக தங்களிடம் நடந்து கொள்வதாகவும் இதனால் தங்கள் குடும்பத்தினர் மிகவும் மன உளைச்சலில் இருப்பதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் பிரச்சினையில் தனக்கும் தனது குடும்பத்திற்கும் உடனடியாக உதவி தேவை என்றும் அவர் கோரியுள்ளார்.

கொரோனாவால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது பற்றி அந்தப் பதிவில் அவர் தெளிவாகக் குறிப்பிடவில்லை.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
தண்ணீருக்குள் ஸ்ருதி செய்த அட்டகாசம்தண்ணீருக்குள் ஸ்ருதி செய்த ... பிகில் 'ராயப்பன்'ஆக விஜய் நடிக்க சுஷாந்த் தான் காரணம்! பிகில் 'ராயப்பன்'ஆக விஜய் நடிக்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

LAX - Trichy,இந்தியா
01 ஜூலை, 2020 - 09:14 Report Abuse
LAX புகார் என்றாலும் அதை சரியான முறையில் அனுப்ப வேண்டும்.. அதென்ன ட்விட்டர்ல tag பண்றது.. இந்த மாதிரி அதிமேதாவிகளின் ஒழுங்கீனங்கள் இப்போதெல்லாம்.. அதிகரிச்சுக்கிட்டே இருக்கு..
Rate this:
jayanantham - tamilnaadu ,இந்தியா
01 ஜூலை, 2020 - 04:43 Report Abuse
jayanantham இவனிடம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பிக்பாஸ் மதுமிதாவைப் பற்றி புழுகு மூட்டையை அவிழ்த்து கடைவிரித்த களவாணி.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
30 ஜூன், 2020 - 09:12 Report Abuse
 Muruga Vel பார்த்தால் கார்ப்ரேஷன்ல வேல செஞ்சவர் மாதிரி இருக்கு
Rate this:
Muraleedharan.M - Chennai,இந்தியா
30 ஜூன், 2020 - 07:41 Report Abuse
Muraleedharan.M Corporation ஆட்கள் பொல்லாத ஆட்கள். Becare ful
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in