Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சினிமா படப்பிடிப்புக்கு மகாராஷ்டிர அரசு அனுமதி: 65 வயதை கடந்தவர்கள் நடிக்க தடை

05 ஜூன், 2020 - 11:36 IST
எழுத்தின் அளவு:
Hindi-shooting-allowed-with-strict-rule

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுதும் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. கடந்த மார்ச் மாதம் முதலே திரைப்பட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. தற்போது ஒரு சில மாநிலங்கள் சின்னத்திரை படப்பிடிப்புக்கு மட்டும் அனுமதி வழங்கி உள்ளது.

முதன் முறையாக மகாராஷ்டிர அரசு சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் படப்பிடிப்பில் குறைவான எண்ணிக்கையில் ஆட்கள் பணியாற்ற வேண்டும். சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும். மருத்துவ குழுவை உடன் வைத்திருக்க வேண்டும் என்பது உள்பட பல நிபந்தனைகளை விதித்துள்ளது. கடைசியாக 65 வயதுக்கு மேலானவர்கள் நடிக்க தடை விதித்துள்ளது. மற்ற நிபந்தனைகளை ஏற்றுக் கொண்ட சினிமாத்துறை 65 வயதுக்கு மேலானவர்கள் நடிக்க கூடாது என்ற நிபந்தனையை மட்டும் ஏற்கவில்லை.

"அமிதாப்பச்சன், நஸ்ருதின்ஷா, ஷக்தி கபூர், மிதுன் சக்ரவர்த்தி, மகேஷ்பட், சேகர் கபூர், அனுபம்கேர் உள்ளிட்ட பல மூத்த கலைஞர்கள் 65 வயதை கடந்தவர்கள். அவர்கள் இல்லாமல் இந்தி சினிமா இல்லை. அவர்கள் இல்லாமல் படப்பிடிப்பு சாத்தியம் இல்லை. எனவே இந்த நிபந்தனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இயக்குனர்கள் சங்கம் அறிக்கை ஒன்றின் மூலமாக கேட்டுக் கொண்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தமிழ் சினிமாவின் எக்ஸ்பிரஸ் கவிஞர் : தஞ்சை ராமையாதாஸின் 106வது பிறந்த நாள்தமிழ் சினிமாவின் எக்ஸ்பிரஸ் கவிஞர் : ... ரூ.600 கோடியில் கொரோனா இல்லாத திரைப்பட நகரம்: டாம் குரூஸ் அமைக்கிறார் ரூ.600 கோடியில் கொரோனா இல்லாத திரைப்பட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in