Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குடிக்கும் முன் உங்கள் குழந்தையின் கண்ணீரை நினைத்து பாருங்கள் : ராகவா லாரன்ஸ்

20 மே, 2020 - 18:45 IST
எழுத்தின் அளவு:
Raghava-Lawrences-request

கொரோனா தாக்கம் காரணமாக இந்த 50 நாட்களாக தொடரும் ஊரடங்கில் சினிமா தொழிலாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் மிகப்பெரிய அளவில் நிவாரண உதவி செய்ததற்காக பாராட்டு பெற்றவர் நடிகர் ராகவா லாரன்ஸ். இந்த நிலையில் தனது ரசிகர்களுக்கு முக்கியமான வேண்டுகோள் விடுத்து முகநூல் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார் லாரன்ஸ்.

அதில் அவர் கூறியுள்ளதாவது, “கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் மீண்டும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. நிறைய பேர் கூட்டம் கூட்டமாக கடையில் மது வாங்குவதையும் பார்க்க முடிகிறது.. எனது அம்மா மற்றும் சில நபர்கள் கூட என்னிடம், நாம் மற்றவர்கள் சிரமப்படக்கூடாது என்று உதவி செய்கிறோமே ஆனால் இப்படி பொறுப்பற்ற நபர்களை பார்க்கும்போது நாம் சரியான ஆட்களுக்குத்தான் உதவி செய்கிறோமா என்றும் தொடர்ந்து இப்படிப்பட்டவர்களுக்கு நாம் உதவி செய்யத்தான் வேண்டுமா என கேள்வி எழுப்பினார்கள்.. எனது அம்மா மட்டுமல்ல எனது நண்பர்களுக்கும் கூட இது சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது.

அவர்களுக்கு எல்லோருக்கும் நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால் மது குடிக்கும் ஒரு மனிதரை மட்டும் பார்த்துவிட்டு, அவருக்கான உதவியை நாம் நிறுத்தினால், அவர் குடும்பத்திலுள்ள அவரது மனைவி, குழந்தைகள், பெற்றோர் என பலர் பாதிக்கப்படுவார்கள்.. நாம் பார்க்க வேண்டியது அவர்களைத்தான்.. அதனால் இந்த சமயத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்வதை நாம் நிறுத்தக்கூடாது..” என்று கூறியுள்ளார்.

“தவிர மது அருந்துபவர்களுக்கு எனது ஒரு சிறிய வேண்டுகோள் என்னவென்றால் குடிப்பதற்கு முன் உங்கள் வீட்டில் பசியால் துடிக்கும் உங்கள் குழந்தையின் கண்ணீரை ஒருமுறை நினைத்துப் பாருங்கள்.. அதனால் நேர்மையாகவே சிந்திப்போம்.. சேவை தான் கடவுள்” என குறிப்பிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
சென்னை 28 - 3 : வெங்கட்பிரபு திட்டம்சென்னை 28 - 3 : வெங்கட்பிரபு திட்டம் சிரஞ்சீவி படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார் ஜெனிலியா சிரஞ்சீவி படத்தில் ரீ-என்ட்ரி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

21 மே, 2020 - 10:53 Report Abuse
MurphysLaw Once you donate, your job is over. please don't give free advice.
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
21 மே, 2020 - 05:20 Report Abuse
Mani . V குடிக்கும் முன் உங்கள் குழந்தையின் கண்ணீரை நினைத்து பாருங்கள். அத்துடன், யார் செத்தால் எனக்கென்ன? என்று செயல்படும் "தமிழ்நாட்டு சாமியையும்" நினைத்து பாருங்கள்.
Rate this:
skanda kumar - bangalore,இந்தியா
21 மே, 2020 - 00:41 Report Abuse
skanda kumar tasmac tamilanin adipadai kudiyurimaiyai pidungadheenga.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in