Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் விஜய் - திரிஷா கூட்டணி: ரசிகர்களை குஷியாக்கிய பிரபல இயக்குனர்

17 மே, 2020 - 16:37 IST
எழுத்தின் அளவு:
If-possible-Vijay---Trisha-will-pair-again

உலக அளவில் அதிக ரசிகர்களை கொண்ட வெப் தொடர் மணி ஹீஸ்ட். ஸ்பானிஷ் மொழி தொடரான இது க்ரைம் திரில்லர் வகையைச் சேர்ந்தது. வங்கியில் கொள்ளையடிப்பது தான் இத்தொடரின் கதைக்களம். நெட்பிலிக்ஸ்ல் வெளியான இத்தொடருக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த மணி ஹீஸ்ட் தொடரின் இயக்குனர் அலெக்ஸ் ரோட்ரிகோ, அத்தொடரின் முக்கிய கதாபாத்திரமான பேராசிரியர் கேரக்டருக்கு விஜய் தான் பொருத்தமானவராக இருப்பார் எனக் கூறினார். இதனால் விஜய் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், மணி ஹீஸ்ட் தொடரின் மற்றொரு இயக்குனரான ஜாவிர் குவிண்டாசிடம், அத்தொடரில் வரும் காவல்துறை அதிகாரி அலிசியா செரா கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கும் இந்திய நடிகைகள் யார் என கேட்கப்பட்டது. அதற்கு அவர் நடிகை திரிஷாவின் புகைப்படத்தை காட்டி, அவர் தான் சரியாக இருப்பார் என்றார்.

ஜாவிர் குவிண்டாசின் இந்த பதில், திரிஷாவை செம ஹேப்பி மூடிற்கு அழைத்து சென்றுள்ளது. திரிஷாவும், விஜய்யும் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார்கள். ஒருவேளை மணி ஹீஸ்ட் தொடரின் இந்திய வெர்ஷனில் இருவரும் மீண்டும் இணைந்தால் நிச்சயம் தூள் தான் என ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
முதல் முறையாக குழந்தை புகைப்படத்தை வெளியிட்ட சங்கவிமுதல் முறையாக குழந்தை புகைப்படத்தை ... ராஷ்மிகாவின் விநோதப் பழக்கம் ராஷ்மிகாவின் விநோதப் பழக்கம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in