Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

7.7 கோடி பார்வையாளர்களை பெற்று ராமாயணம் தொடர் உலக சாதனை

01 மே, 2020 - 19:23 IST
எழுத்தின் அளவு:
Ramayanam-broadcasting-made-record-in-DD

புதுடில்லி: ஊரடங்கு தொடங்கிய போது, தூர்தர்ஷனில் மீண்டும் ஒளிபரப்பப்பட்ட ராமாயணம் தொடர், ஏப்ரல் 16-ம் தேதி, 7.7 கோடி பார்வையாளர்களை பெற்று உலக சாதனை படைத்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு போடப்பட்டது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழலால், பொழுதுபோக்கிற்காக தூர்தர்ஷனில் ராமாயணம் தொடர் மீண்டும் ஒளிபரப்பப்பட்டது. ராமானந்த் சாகர் எழுதி, தயாரித்து, இயக்கிய இத்தொடர், முதலில் 1987-ம் ஆண்டு ஒளிபரப்பாகி, இந்திய மக்களை தொலைக்காட்சி முன் கட்டிப்போட்டது.

33 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மார்ச் மாதம் மீண்டும் ஒளிபரப்பப்பட்டது. இதனால் சரிந்திருந்த தூர்தர்ஷனின் பார்வையாளர்கள் எண்ணிக்கை மளமளவென அதிகரித்தது. ஏப்ரல் 16-ம் தேதி, இத்தொடர் இதுவரையிலான உலக பார்வையாளர்கள் சாதனைகளை அடித்து நொறுக்கி 7.7 கோடி பார்வையாளர்களை பெற்றதாக தூர்தர்ஷன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இத்தொடரில் சீதா தேவியாக நடித்த தீபிகா சிக்லியா, கடந்த மாதம் ராமாயணத்தில் நடித்தவர்கள், வேலை பார்த்தவர்களின் குழு புகைப்படத்தை பதிவேற்றி, அவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போது உயிருடன் இல்லை. அவர்கள் ஆன்மா சாந்தியடையட்டும் என்று கூறியிருந்தார்.

அப்புகைப்படம் சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாக பரவியது. தற்போது ராமாயணம் தொடர் முடிவடைந்துவிட்டதால், தூர்தஷனின் பார்வையாளர்கள் எண்ணிக்கை 46 சதவீதம் சரிந்துள்ளதாக இந்திய ஒளிபரப்பு ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வித்யா பிரதீப் பெயரில் போலி கணக்குவித்யா பிரதீப் பெயரில் போலி கணக்கு சபதம்! சபதம்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in