Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஊரடங்கு எப்போது முடியும்? விவேக் சூசகம்

27 ஏப், 2020 - 16:14 IST
எழுத்தின் அளவு:
When-corona-lockdown-will-clease-:-Actor-Vivek-reply

கொரோனா ஊரடங்கு தொடர்பாக நடிகர் விவேக் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா ஊரடங்கு எப்போது முடியும் என்பது குறித்து அவர் சூசகமாக பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, " முதலில் 21 நாட்கள் ஊரடங்கு அறிவிச்சாங்க. பிறகு 19 நாட்கள் நீட்டிச்சாங்க. அதுல முப்பது நாட்கள் கடந்துட்டோம். இந்த நான்கு நாட்கள் மிகவும் முக்கியமானது.

இந்த ஊரடங்கு எப்ப முடியும். மறுபடியும் எப்ப நாம சகஜமா வெளிய போக போறோம்னு எல்லோரும் கேட்கிறோம். என்னைக்கு, அரசு சொல்றதை நாம கேட்கிறோமோ, அன்னைக்குத்தான் நாம வெளிய வரமுடியும்.

இப்பயும் கூட்டமாக நிற்கிறதுனாலதான் இந்த ஊரடங்கு தொடருது. இந்த தொற்று குறைந்து, குறைந்து ஸீரோ கேசஸ்னு வரணும். அப்பதான் நாமளும் அதுல இருந்து வெளிய வர உதவும். தீதும் நன்றும் பிறர்தர வாரா. அரசு சொல்வதை நாம கேட்க தவறியதால் தான் இந்த ஊரடங்கு நீட்சி.

எங்க போனாலும் பைக்ல பிரெண்ட்ஸ்களோட போறது, கடைகள்ல கூட்டமா நிற்கறதை பார்க்கிறோம். இப்படி இருக்கிற வரைக்கும் நம்மால ஊரடங்கை நிறுத்த முடியாது. நாம வீட்டுககுள்ள தான் முடங்கியிருக்க வேண்டியிருக்கும்.

நாம இப்ப முக்கியமான கட்டத்துல இருக்கோம். மக்களே, இளைஞர்களே, கொஞ்சம் யோசிச்சு பாருங்க. முழுமையான ஊரடங்கை பின்பற்றி, எப்படியாவது இந்த தொற்று குறைஞ்சு, கேசஸ் ஸீரோன்னு வரும்போது நாம வெளிய வர முடியும். அது நம்ம கையிலதான் இருக்கு. நாம இனி மேலாவது விழித்துக் கொண்டு தனிமையில் இருக்கவும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் செய்யணும்.

சிங்கப்பூர்ல இருந்து வந்த லேட்டஸ்ட் ஆய்வின்படி, மே மாத இறுதியில உலகத்துக்கே இதுக்கு ஒரு விடிவு கிடைக்கலாம்னு சொல்றாங்க. நமக்கும் சீக்கிரம் கிடைக்க வாய்ப்பிருக்கு, தமிழக அரசுடனும் இந்திய அரசுடனும் ஒத்துழைத்தால். நன்றி".

இவ்வாறு விவேக் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
பல நாள் பலன் ஒரு நாளில் கெட்டது: எஸ்.பி.ஜனநாதன்பல நாள் பலன் ஒரு நாளில் கெட்டது: ... ஜோதிகா பேச்சில் சமத்துவம் இல்லை; நியாயப்படுத்துவது வெட்கக்கேடானது : காயத்ரி ரகுராம் ஜோதிகா பேச்சில் சமத்துவம் இல்லை; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Srinivasan - chennai,இந்தியா
02 மே, 2020 - 10:44 Report Abuse
Srinivasan நன்றி மிஸ்டர் விவேக். பாராட்டுக்கள். சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதாதலேயே நம் மக்கள் தொடர்ந்து பாதிக்கப் படுகிறார்கள். இதனைத் தாங்கள் அழுத்தமாகத் தெரிவித்துள்ளீர்கள். மீண்டும் நன்றி.
Rate this:
Covaxin  (திமுக ஒழியும், தாமரை மலரும் பாருங்கடா) இந்தாளு சினிமாவில் சொல்லும் பல 'கருத்துக்கள்' முகம் சுளிக்க வைத்தாலும் சினிமாவிற்கு வெளியே, பொதுவெளியில் சொல்லும் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகத்தான் இருக்கிறது.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
28 ஏப், 2020 - 04:54 Report Abuse
meenakshisundaram ம்,அறிவு பூர்வமா கருது சொல்லி இருக்காரு,எவன் கேட்பான்?-ஜோதிகா பின் புறமாக செல்லும் கூட்டமல்லாவா ஜாஸ்தி?
Rate this:
Vaduvooraan - Chennai ,இந்தியா
27 ஏப், 2020 - 21:59 Report Abuse
Vaduvooraan தமிழ்நாட்டில் முதல்முதலாக ஒரு நடிகர் உருப்படியாக ஒரு கருத்தை தெரிவித்திருக்கிறார். அரைவேக்காடு நடிகர்கள், வாய்ப்பு இல்லாத இயக்குநர்கள், நிறைய நேரத்தை வைத்துக்கொண்டு பொழுதுபோகாது வீட்டில் உட்கார்ந்திருக்கும் முன்னாள் நடிகையர் எல்லோரும் ஒட்டு மொத்தமாக மாநில மத்திய அரசுக்கு எதிராக மட்டுமே கருத்து சொல்வார்கள். பாராட்டுக்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in