Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் புது திருப்பம் : தாணு தலைமையில் புதிய அணி

18 ஏப், 2020 - 13:07 IST
எழுத்தின் அளவு:
Producer-council-Election-:-Thanu-team-also-participating

தமிழ் சினிமாவை பொருத்தமட்டில் முக்கிய சங்கங்களான நடிகர் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் அரசு கட்டுப்பாட்டிற்கு சென்றுவிட்டது. இரு சங்கங்களையும் அரசை சார்ந்த தனி நிர்வாக அதிகாரி நிர்வகிக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி ஜூன் 21ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.

இந்த தேர்தலில் அம்மா கிரியேசன்ஸ் டி.சிவா தலைமையில் ஒரு அணியினரும், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட உள்ளனர். கடந்த முறை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஷால் அணி இம்முறை களமிறங்க வாய்ப்பு குறைவு என்கிறார்கள்.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக தாணு தலைமையில் ஒரு அணி உருவாகி உள்ளது. இதில் புதிய தயாரிப்பாளர்கள் பலரும் இணைய உள்ளனர். இவர்களுக்கு பல மூத்த தயாரிப்பாளர்களும், இன்னும் பிற தயாரிப்பாளர்களும் ஆதரவு கொடுக்க முன் வந்துள்ளனர். தாணுவின் அணியில் யாரும் எதிர்பார்க்காத பல தயாரிப்பாளர்கள் இருப்பார்கள் என்கின்றனர். மார்ச் 21ம் தேதியே இந்த அணியை அறிமுகம் செய்ய தாணு திட்டமிட்டு இருந்தார். ஆனால் கொரோனா ஊரடங்கால் முடியாமல் போய்விட்டது. தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் தாணு தலைமையில் 6 அலுவலக பொறுப்பாளர்கள், 21 செயற்குழு உறுப்பினர்கள் தேர்தலை சந்திக்க தயாராகிவிட்டனர். விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது.

தயாரிப்பாளர்கள் தற்போது சந்தித்து வரும் பல பிரச்னைகளை தாணுவால் தீர்வு காண முடியும் என நம்புகின்றனர். தற்போதைய சூழலில் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல், மூவர் அணியாக களம் காண உள்ளது. எது எப்படியோ யார் பதவிக்கு வந்தாலும் சரி தயாரிப்பாளர்களுக்கு நல்லது செய்து சினிமாவை காப்பாற்றினால் சரி.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சுகாதார பணியாளர்களுக்கு உணவு சமைத்து தரும் ராகினி திவேதிசுகாதார பணியாளர்களுக்கு உணவு ... அழகான ஸ்ரீதேவியின் குடும்பப் புகைப்படம் அழகான ஸ்ரீதேவியின் குடும்பப் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

vira - tamil naadu,இந்தியா
18 ஏப், 2020 - 17:21 Report Abuse
vira சினிமாவை காப்பாற்றினால் சரியா அப்போ
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in