Advertisement

சிறப்புச்செய்திகள்

உயர் சிகிச்சைக்காக தென் கொரியா செல்கிறாரா சமந்தா? | ராம்சரணின் அடுத்தபடம் அறிவிப்பு | காஷ்மீர் பைல்ஸ் விமர்சனம் : உண்மைக்கு முன் பொய் தாக்குப் பிடிக்காது - அனுபம் கேர் காட்டம் | திருமணத்திற்கு தயாராகிறாரா கீர்த்தி சுரேஷ் : மீண்டும் பரவிய செய்தி | திருமணநாளில் ரஜினியிடம் வாழ்த்து பெற்ற ரோபோ சங்கர் | நயன்தாராவின் ‛கோல்டு' சென்சார்- ரன்னிங் டைம் வெளியானது | 'புஷ்பா' ரஷ்ய மொழி டிரைலர் வெளியீடு | 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் : கோவா பட விழாவில் தேர்வு குழு அதிருப்தி | ஒரு படம் ரூ.200 கோடி வசூலித்தால் தயாரிப்பாளருக்கு என்ன கிடைக்கும்? | வாரிசு - ரஞ்சிதமே… தெலுங்குப் பாடல் நாளை வெளியீடு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரம்மி தான் எப்போதும் ஸ்பெஷல்: ஐஸ்வர்யா ராஜேஷ்

11 ஏப், 2020 - 16:11 IST
எழுத்தின் அளவு:
Rummy-is-special-to-me-says-Aishwarya-Rajesh

கொரோனா ஊரடங்கால் வீட்டுக்குள் இருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இன்ஸ்டாகிராம் லைவ் சேட்டில் ஊடகம் ஒன்றிற்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் "உங்கள் மனதுக்கு நெருக்கமான படம் எது" என கேட்கப்பட்டது.

அதற்கு அவர், "நான் நடித்த படங்கள் எல்லாமே என் மனதுக்கு நெருக்கமானவை தான். ஆனால் ரம்மி படம் எப்போதுமே எனக்கு ஸ்பெஷல். அந்த படத்தில் நடிப்பதற்காக நான் முதலில் ஆடிசனில் கலந்து கொண்டேன். ஆனால் அவர்கள் என்னை முதலில் தேர்ந்தெடுக்கவில்லை.

பிஸியாக நடித்துக் கொண்டிருந்த வேறு ஒரு ஹீரோயினை தான் அவர்கள் முதலில் கேட்டனர். விஜய் சேதுபதி அப்போது பெரிய நடிகராக உயரவில்லை. பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஆகிய இரண்டு படங்கள் தான் அவருக்கு வெற்றி பெற்றிருந்தன. எனவே அந்த நடிகை விஜய் சேதுபதியுடன் நடிக்க முடியாது எனக்கூறி அந்த படத்தை நிராகரித்துவிட்டார்.

பின்னர் தான் ரம்மி படத்தின் இயக்குனர் எனக்கு அந்த வாய்ப்பை வழங்கினார். அந்த படம் தான் என்னை முதன் முதலில் வெளியுலகுக்கு அடையாளம் காட்டியது. அந்த படத்தில் நடித்த நாட்களை என்னால் மறக்க முடியாது.

அப்போது கேரவன் வசதி எல்லாம் கிடையாது. மரத்தடியில் தான் உடை மாற்றினேன். படக்குழுவினர் எனக்கு பாதுகாப்பாக இருந்தனர். அது என் வாழ்வின் இனிமையான நாட்கள். ரம்மி படத்தில் ஹிட்டான கூடமேல கூட வெச்சு பாடல் எனக்கு நல்ல அடையாளத்தை தந்தது. எனவே ரம்மி எனக்கு எப்போதும் ஸ்பெஷல் தான்.

அந்தப் படத்திற்கு பிறகு, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ் ஆகிய படங்களில் நடித்தேன். அதற்கு அடுத்து நான் நடித்த காக்கா முட்டை படம் நல்ல நடிகை என பெயர் வாங்கிக் கொடுத்தது.

நான் நடித்த படங்கள் அனைத்திலும் என் கேரக்டர் பெரிதாக பேசப்பட்டது. மக்கள் என்னை அந்தந்த கேரக்டரின் பெயரை சொல்லி தான் அழைத்தனர். தர்மதுரை அன்புசெல்வி, வடசென்னை பத்மா, கனா கவுசி என நான் நடித்த கேரக்டர்கள் மக்கள் மனதில் ஆழமாக பதிந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி", என அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
முக்கிய அறிவிப்பை ஏப்.,14க்கு மாற்றிய ராகவா லாரன்ஸ்முக்கிய அறிவிப்பை ஏப்.,14க்கு மாற்றிய ... உங்களுக்கு எல்லாம் அக்கா, தங்கை கிடையாதா? - அனுபமா கோபம் உங்களுக்கு எல்லாம் அக்கா, தங்கை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in