Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட ஹாரிபாட்டர் கதாசிரியர்

08 ஏப், 2020 - 11:05 IST
எழுத்தின் அளவு:
JK-Rowling-reply-how-she-recovered-from-Corona

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உலகம் முழுவதிலும் கவர்ந்த ஒரு கதை என்றால் ஹாரிபாட்டர் கதைக்கு முதலிடம் உண்டு.. இந்தப்புத்தகத்தின் விற்பனை வரலாறு காணாத ஒன்று.. பல பாகங்களாக வெளியான இந்த புத்தகத்தை எழுதியவர் பிரபல எழுத்தாளர் ஜே.கே.ரவ்லிங்.. இவர் சமீபத்தில் தனக்கும் கொரோனா தொற்று குறித்த அறிகுறிகள் இருந்ததாகவும், ஆனால் மருத்துவமனை செல்லாமலேயே அதிலிருந்து மீண்டதாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஜேகே ரவ்லிங் கூறும்போது, “கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு எனக்கும் கொரோனா தொற்று குறித்த அறிகுறிகள் தென்பட்டன. அந்த சமயத்தில் குயீன்ஸ் மருத்துவமனை டாக்டர் ஒருவர், இந்த அறிகுறிகள் தென்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் அதிலிருந்து எப்படி மீளலாம் என சில டிப்ஸ்களை கொடுத்திருந்தார்.. என் கணவரின் ஆலோசனைப்படி வீட்டிலிருந்தபடியே அவற்றை மேற்கொண்டேன்.. இப்போது நான் பூரண குணமாகிவிட்டேன்.. இதோ மருத்துவர்கள் கொடுத்த அந்த இலவசமான, பக்க விளைவுகள் எதுவும் இல்லாத, உங்களுக்கோ அல்லது நீங்கள் நேசிக்கும் நபருக்கோ உதவக்கூடிய டிப்ஸை உங்களுக்கும் தருகிறேன்.. ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருங்கள்” என கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த டாக்டர் குறித்த வீடியோவையும் இணைத்துள்ளார் ஜே.கே.ரவ்லிங்.

ஹாலிவுட் நடிகர்கள் சில கொரோனா தொற்றால் தொடர்ந்து உயிரிழந்து வரும் இந்த சமயத்தில் இந்த கதாசிரியர் இப்படி கூறியுள்ளது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.




Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மனோரமா மகனுக்கு என்னாச்சு? - பேரன் விளக்கம்மனோரமா மகனுக்கு என்னாச்சு? - பேரன் ... யாரும் பெரியவரல்ல, யாரும் சிறியவரல்ல - அனுஷ்கா யாரும் பெரியவரல்ல, யாரும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in