Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வலம் வரும் பவானியும் ஜே.டியும்

06 ஏப், 2020 - 19:46 IST
எழுத்தின் அளவு:
Bhavani---JD-back-after-30-years

லோகேஷ் கனகராஜ் டைரக்சனில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து நடித்துள்ள மாஸ்டர் படத்தில் ஹீரோ-வில்லன் என இருவருமே சரிசமமமான கதாபாத்திரங்களாக உருவாக்கப்பட்டுள்ளார்கள் என்றே படக்குழுவினரால் சொல்லப்படுகிறது. இந்தப்படத்தில் ஜேம்ஸ் துரைராஜ் அதாவது ஜே.டி என்கிற பெயரில் விஜய்யும், பவானி என்கிற பெயரில் விஜய்சேதுபதியும் நடித்துள்ளார்கள்.

இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் 1989ல் தெலுங்கில் நாகார்ஜுனா நடிப்பில் ராம்கோபால் வர்மாவின் முதல் படமாக வெளியான படம் சிவா. பின்னர் 1990ல் உதயம் என்கிற பெயரில் தமிழிலும் வெளியாகி இருவருக்குமே தமிழ் ரசிகர்கள் மத்தியில் இந்தப்படம் நல்ல அறிமுகத்தை தந்தது.. அதுமட்டுமல்ல இந்தப்படத்தில் கொடூரமான வில்லனாக நடித்திருந்த ரகுவரனின் பெயர் பவானி.. இந்தப்படம் வெளியான சமயத்தில் ரகுவரனின் பவானி கதாபாத்திரமே ரசிகர்களிடத்தில் பெரிதும் பேசப்பட்டது.

ஆக்சன் படங்களை இயக்குபவர்களுக்கு ராம்கோபால் வர்மா ஒரு இன்ஸ்பிரேஷன் என்பதால் வில்லனாக நடிக்கும் விஜய்சேதுபதியின் கதாபாத்திரத்திற்கு பவானி என லோகேஷ் கனகராஜ் பெயர் வைத்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.. அதுமட்டுமல்ல, உதயம் படத்தில் சிறிய வில்லனாக நடித்த நடிகர் சக்கரவர்த்தியின் காதாபாத்திர பெயர் ஜே.துர்கா ராவ்.. படத்தில் அவரை ஜே.டி என்றுதான் அழைப்பார்கள்.. ஏன்.. இன்றுவரை கூட திரையுலகத்தில் அவரது பெயரை ஜேடி சக்கரவர்த்தி என்றுதான் அனைத்து படங்களிலும் குறிப்பிட்டு வருகிறார்கள்.. அந்தவகையில் லோகேஷ் கனகராஜ் இந்த இரண்டு கதாபாத்திரங்களையும் 30 வருடங்கள் கழித்து மீண்டும் மாஸ்டர் மூலம் நினைவூட்டல் செய்ய இருக்கிறார் என பரவலாக பேசப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பிக்கப் ஆன அசோக் செல்வன் ; முட்டுக்கட்டை போட்ட கொரோனாபிக்கப் ஆன அசோக் செல்வன் ; ... அமலாபால் மகிழ்ச்சி அமலாபால் மகிழ்ச்சி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

KayD - Mississauga,கனடா
06 ஏப், 2020 - 22:40 Report Abuse
KayD கதையும் அதையே தான்.. கொஞ்சம் லேட்டஸ்ட் மசாலாவுடன்.. 30 nu solliteenga vijay fans mostky 30 ku kizhae thana avunga udhayam .. siva ellam paathu iruka maataanga. .. botany class paatu hit andha padathil ingayum vaathi coming.. botany vaathi oru connection iruku paarunga. Ilaiyarja music and amala naditha padam adhu .. Naga kum amala ku kaadhal udhayam aana padamum adhai thaan
Rate this:
06 ஏப், 2020 - 22:00 Report Abuse
ilaiyaraja muthu அந்த படத்தோட ரீமேக் கா இது..... சுத்தம்..... தளபதியை காலி பண்ணிடுவாங்க போலியே....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in