Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உங்கள் தொலைநோக்கு பார்வை தோற்று விட்டது: மோடிக்கு கமல் காட்டமான கடிதம்

06 ஏப், 2020 - 18:08 IST
எழுத்தின் அளவு:
Kamal-wrote-letter-to-PM-Modi

பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன், மூன்று பக்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

"இந்த கடிதத்தை நான் ஒரு பொறுப்புள்ள குடிமகனாகவும் அதே சமயம் பாதிக்கப்பட்ட தரப்பை சேர்ந்தவனாகவும் எழுதுகிறேன். கடந்த 23-ஆம் தேதி முதலில் நான் உங்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில் அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கான இழப்பீட்டை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டேன்.

இதற்கு அடுத்த நாளே நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பணமதிப்பிழப்பு(ரூபாய் நோட்ட வாபஸ்) நடவடிக்கை அறிவிக்கப்பட்ட அதே பாணியில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முறையாக திட்டமிடப்படாமல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பின் போது எப்படி கால அவகாசம் கொடுக்கப்படவில்லையோ அது போல் ஊரடங்கு உத்தரவிற்கும் கொடுக்கப்படவில்லை.





நீங்கள் இந்த நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். மேலும் இந்த நெருக்கடியான சமயத்தில் 140 கோடி இந்திய மக்கள் இன்று வரை உங்களை நம்பி உங்கள் வழிகாட்டுதலை பின்பற்றி வருகிறார்கள். ஒரு தலைவர் சொன்னவுடன் இத்தனை கோடி மக்கள் கேட்கிறார்கள் என்றால் அந்த வாய்ப்பு உங்களை தவிர உலகில் வேறு எந்த தலைவருக்கும் இல்லை. நீங்கள் சொன்னால் செய்கிறார்கள். கொரோனாவை ஒழிக்க இரவு பகல் பாராமல் பணியாற்றும் அரசு துறை ஊழியர்களுக்கு கை தட்டுங்கள் என்றவுடன் அனைவரும் அதை செய்தனர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

பணமதிப்பிழப்பின் போது நடந்த அதே தவறு இப்போதும் நடக்கிறதோ என்ற மிகப் பெரிய பயம் எனக்கு ஏற்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பின் போது ஏழை மக்கள் தங்களுடைய சேமிப்பையும் வாழ்வாதாரத்தையும் இழந்தார்கள். ஆனால் இப்போது வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் சேர்த்து இழந்து வருகிறார்கள்.





உங்கள் பேச்சை கேட்கும் மக்கள், எண்ணெய் ஊற்றி விளக்கேற்றுகிறார்கள். மற்றொரு பக்கம் அடுத்த ரொட்டியை சமைக்க எண்ணெய் இல்லாமல் ஏழைகள் தவிக்கிறார்கள். கடந்த இரு முறை நீங்கள் உரையாற்றிய போது இந்த கடினமான சூழலில் பிரச்சினைகளை சந்திக்கும் மக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினீர்கள். இது போன்ற உளவியல் ரீதியிலான நடவடிக்கைகள் தேவைதான் என்றாலும், அதைவிட விரைவாக செய்ய வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன.

உங்களுடைய இந்த உளவியல் ரீதியிலான நடவடிக்கைகள், பண வசதி இருக்கும் மக்களை பால்கனியில் நின்று உற்சாகமாக செயல்பட வைக்கும். ஆனால் தலைக்கு மேல் கூரைகூட இல்லாதவர்கள் என்ன செய்வார்கள். நம் சமூகத்தில் அதிகமாக இருக்கும் ஏழை மக்களை புறக்கணித்துவிட்டு பால்கனி மக்களுக்காகவே இயங்கும் பால்கனி அரசாக நீங்கள் இருக்க விரும்பவில்லை என்பதில் நான் உறுதியாக உள்ளேன். ஏழை மக்களை புறக்கணிக்கும் அரசுகள் கவிழ்ந்த வரலாறுகளும் உண்டு.




தினக்கூலி தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், தெருவோர வியாபாரிகள், ஆட்டோ ரிக்ஷா, டாக்ஸி டிரைவர்கள், புலம்பெயர்ந்த மக்கள் என லட்சக்கணக்கானோர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடுகிறார்கள். நடுத்தர மக்களை பாதுகாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதற்காக நாம் நடுத்தர மக்களை புறக்கணிக்க வேண்டும் என்பது எனது ஆலோசனை அல்ல. அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோருகிறேன். பசியால் யாரும் வாடக் கூடாது என்பது உறுதிப்படுத்த வேண்டும். கொரோனா வைரஸால் பாதிக்கப்படாமல் காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் ஏழைகள் பசி, சோர்வு, வறுமையால் வாட வழி வகை செய்து வருகிறோம்.

உங்கள் தொலைநோக்கு பார்வை தோற்றுவிட்டது. நான் தேசத்திற்கு விரோதமானவன் என உங்கள் ஆதரவாளர்கள் சொல்வார்கள். அதைப்பற்றி நான் கவலைப்பட போவதில்லை. இயல்பான மற்றும் பாதுகாப்பான வாழ்க்கை வாழ்வதற்காகவே மக்கள் அரசை நியமித்து ஊதியம் கொடுத்து வருகிறார்கள். நாங்கள் கோபத்துடன் இருந்தாலும் உங்கள் பக்கம் இருக்கிறோம்".

இவ்வாறு கமல் அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (95) கருத்தைப் பதிவு செய்ய
கொரோனா அழிந்த பின் என்ன செய்யணும்? : காஜல்கொரோனா அழிந்த பின் என்ன செய்யணும்? : ... கண்டெண்ட் கிடைக்கலை.. சூரி முகத்தில் சுடுதண்ணீரை ஊற்றிய மகன்! கண்டெண்ட் கிடைக்கலை.. சூரி முகத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (95)

Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
08 ஏப், 2020 - 13:48 Report Abuse
Swaminathan Chandramouli மழை காலத்தில் கிணற்று தவளை நானும் இருக்கிறேன் என்று அவ்வப்போது சத்தம் செய்யுமாம் அந்த வகையை சேர்ந்தவர் நமது கமல் அவர்கள்
Rate this:
07 ஏப், 2020 - 22:53 Report Abuse
ஜப்பான்நாட்டு துணைமுதல்வர்   சொடலை கடுதாசிய ஒரு தடவைக்கு பன்னெண்டு தடவ படிச்சிட்டேன், தப்பிலிக்குனு ஒரு வார்த்தையை கூட காணோமே? அது சரி, சரியான முன்னேற்பாடு இல்லாம இந்தியன் ௨ படப்பிடிப்பில் மூணே பேர் செத்தாங்களே அதுக்கென்ன சொல்லவீங்க கமால்?
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
07 ஏப், 2020 - 21:41 Report Abuse
 nicolethomson எப்ப தப்லீகி ஜிஹாத் பற்றி கூற போகிறாய்
Rate this:
ராமதாசன் - chennai,இந்தியா
07 ஏப், 2020 - 20:52 Report Abuse
ராமதாசன் முதலில் பிரதமர் கூறியவற்றை கடை பிடிக்கவும் அப்புறம் குறை சொல்லலாம்
Rate this:
Duruvan - Rishikesh,இந்தியா
07 ஏப், 2020 - 16:43 Report Abuse
Duruvan சென்னையில் வெள்ளம் வந்த பொழுது இவனிடம் நிதி கேட்ட பொழுது இவன் கூறியது. " நான் தான் வரி கட்டுகிறேன், பிறகு எதற்கு நிதி" - தப்லிக் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்ல முடியாத ஒரு சோப்லாங்கி
Rate this:
மேலும் 90 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in