Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மத வழிபாட்டுக்காக கூடி குழப்பம் ஏற்படுத்தாதீர்கள்: ஏ.ஆர்.ரஹ்மான் வேண்டுகோள்

02 ஏப், 2020 - 10:37 IST
எழுத்தின் அளவு:
Corona---ARRahman-request

கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டில்லியில் நடந்த ஒரு மத வழிபாட்டு கூட்டத்தில் பங்கேற்றவர்களால் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவது குறித்து அதிர்ச்சியான தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மத ரீதியான சில கருத்து மோதல்களும் உருவாகி உள்ளது.

இந்த நிலையில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது: எந்த சுயநலமும் இல்லாமல் மருத்துவமனைகளில் தைரியமாக பணியாற்றிக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த மோசமான தொற்று பரவிக் கொண்டிருக்கும் நேரத்தில், அவர்கள் இதை கையாள எவ்வளவு தயாராக இருக்கிறார்கள் என்று பார்க்கும்போது மனசு நிறைந்துவிட்டது. நம் உயிரை காப்பாற்ற அவர்கள் உயிரை பணயம் வைக்கின்றனர்.

உலகையே தலைகீழாக மாற்றியுள்ள இந்த கண்ணுக்கு தெரியாத எதிரிக்கு எதிராக, நாம் அனைவரும் நமது வித்தியாசங்களை மறந்து ஒன்றிணைய வேண்டிய நேரம் இது. மனிதம், ஆன்மீகம் ஆகியவற்றின் அழகை செயலில் கொண்டு வரும் நேரம் இது.

நமது பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கும், மூத்த குடிமக்களுக்கும், வசதி வாய்ப்புகள் இல்லாதவர்களுக்கும், புலம்பெயர்ந்த பணியாளர்களுக்கும் உதவி செய்வோம். கடவுள் உங்கள் மனதில் இருக்கிறார். அதுதான் மிகப் பரிசுத்தமான கோயில். மத வழிபாட்டு இடங்களில் கூடி குழப்பத்தை ஏற்படுத்த இது நேரம் அல்ல. அரசாங்கத்தின் அறிவுரையை கேளுங்கள்.

தனிமைப்படுத்திக் கொண்டு சில வாரங்கள் இருந்தால், பல வருடங்கள் ஆயுள் கிடைக்கும். இந்த தொற்றைப் பரப்பி சக மனிதருக்கு தீங்கு ஏற்படுத்தாதீர்கள். இந்த கிருமி உங்களிடம் இருக்கிறது என்பதைக்கூட உங்களுக்கு எச்சரிக்காது. எனவே, உங்களுக்கு தொற்று இல்லை என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். இது புரளிகளை பரப்பி இன்னும் பதற்றத்தை அதிகரிக்கும் நேரம் அல்ல.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (21) கருத்தைப் பதிவு செய்ய
எங்கே?எங்கே? கொரோனா நிதி : எஸ்பிபியின் புதிய இசை முயற்சி கொரோனா நிதி : எஸ்பிபியின் புதிய இசை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (21)

sathyam - Delhi,இந்தியா
07 ஏப், 2020 - 14:18 Report Abuse
sathyam புயலே , அந்த ஒரு வார்த்தையை முன்னால சேர்த்துக்க மறந்திட்டிங்க .
Rate this:
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
03 ஏப், 2020 - 14:56 Report Abuse
திண்டுக்கல் சரவணன் சரியான - பொறுப்பான அறிவுரை. சம்பந்தப்பட்டவர்கள் கேட்பார்கள் என நம்புவோம்.
Rate this:
சுடலைகாண் - சென்னை,இந்தியா
03 ஏப், 2020 - 11:01 Report Abuse
சுடலைகாண் சமூகத்தில் இவளவு உயர்ந்த இடத்தில இருக்கும் ரஹுமானால் கூட டில்லி கயவர்களை கண்டிக்கவோ, துப்புரவு பணியாளர்களை அடிக்க முயற்சித்த மத வெறியர்களை கண்டித்து பேச முடியவில்லை. இதுதான் இந்த மதத்தின் மீது மற்றவர்கள் வெறுக்க காரணமாக மாறுகிறது. வழிபாடு என்பது மக்களை நல்வழி படுத்த. மக்களை அள்ளும் சர்வாதிகார ஜமாத்துகள் இங்கு வழிபாடு தலைமை யாக இருக்கிறது
Rate this:
Ramasamy Chakravarthy - Bangalore,இந்தியா
03 ஏப், 2020 - 08:09 Report Abuse
Ramasamy Chakravarthy வெரி குட் மெசேஜ்
Rate this:
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
03 ஏப், 2020 - 07:40 Report Abuse
அசோக்ராஜ் பொதுவா சொல்லக்கூடாது. மூர்க மதம் மட்டும்தான் இன்றைக்கு குற்றவாளி.
Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in