Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகை ராதிகா ஆப்தேவுக்கு கொரோனா பாதிப்பா?

30 மார், 2020 - 13:18 IST
எழுத்தின் அளவு:
Did-Radhika-Apte-affected-by-corona

அடிக்கடி லண்டன் சென்று திரும்பும் நடிகை, ராதிகா ஆப்தேவை, தனிமையில் இருக்கும்படி அவரது நலம் விரும்பிகளும், மருத்துவர்களும் அறிவுறுத்தி உள்ளனர்.

தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தி மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்தவர் ராதிகா ஆப்தே. சில படங்களில், 'டாப்லெஸ்' ஆகவும், நிர்வாண காட்சிகளில் நடித்தும், சர்ச்சையான படங்களை வெளியிட்டு, அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தியவர். தமிழில், ரஜினியுடன், கபாலி, பிரகாஷ் ராஜுடன், தோனி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது கணவர், லண்டனை சேர்ந்த இசைக்கலைஞர், பெனடிக்ட் டெய்லர்.

அடிக்கடி இந்தியாவுக்கும் லண்டனுக்கும் விமானத்தில் பறக்கும் ராதிகா ஆப்தேவை, அவரது நலம் விரும்பிகள், கொரோனா பரவலை சுட்டிகாட்டி, எச்சரிக்கையாக இருக்கும்படி, அன்பு கட்டளையிட்டனர்.

இந்நிலையில், சமீபத்தில் லண்டன் மருத்துவமனையில் மாஸ்க் அணிந்தபடி அமர்ந்துள்ள தன் படத்தை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராதிகா ஆப்தே பகிர்ந்துள்ளார். அதில், ‛தனக்கு கொரோனா இல்லை என்றும், வழக்கமான பரிசோதனைக்கே வந்துள்ளேன்' என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அதில், ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், ‛இடது விரலில் ஏற்பட்ட காயத்திற்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்துள்ளேன்' என, பதிலளித்துள்ளார்.

கொரோனா பரவாமல் இருக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கையை எடுத்துள்ளதாக ராதிகா ஆப்தே இன்ஸடாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரது ‛மாஸ்க்' அணிந்த படங்கள் சமூகவலைதளத்தில் பரவி, அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவலை பரப்பியுள்ளன.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கொரோனா தந்த இடைவெளி: மகள்களுடன் சிலம்பம் கற்கும் தேவயானிகொரோனா தந்த இடைவெளி: மகள்களுடன் ... பாலோயர்களை பிளாக் செய்த விஷ்ணு விஷால், காரணம் என்ன ? பாலோயர்களை பிளாக் செய்த விஷ்ணு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Muruga Vel - Mumbai,இந்தியா
31 மார், 2020 - 12:03 Report Abuse
 Muruga Vel வழக்கமான பரிசோதனை நல்லது தானே …
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in