ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் | தமிழ் படத்தில் மாலத் தீவு நடிகை | பிளாஷ்பேக்: பக்தி படத்தில் விஜயகாந்த் | பிளாஷ்பேக்: வில்லத்தனத்தில் மிரட்டி, வறுமையில் வாடிய நடிகை | ஐமேக்ஸ் தியேட்டர்கள் : 'ஜனநாயகன், தி ராஜா சாப்' படங்களுக்குப் புதிய சிக்கல் | மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி? |
தற்போது சிம்புவுடன் வேட்டை மன்னன், வாலு என இரண்டு படங்களில் நடிக்கிறார் ஹன்சிகா. இந்த இரண்டு படங்களிலுமே ஹன்சிகாவுக்கு இதுவரை நடிக்காத வித்தியாசமான வேடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் இதுவரை காட்டாத பர்பாமென்சை காட்டி நடித்து வரும் ஹன்சிகா, இனிமேல் இதுபோன்று என் திறமையை வெளிக்கொண்டு வரும் கதாபாத்திரங்களில்தான் நடிப்பேன் என்று தில்லாக பேசி வருகிறார்.
ஆனால் இப்படி பேசும் ஹன்சிகா, கதைக்கும், கதாபாத்திரத்திற்கேற்பவும் தனது உடல்கட்டை பராமரிக்க வேண்டும் என்பதை சில சமயங்களில் மறந்து விடுகிறாராம். அளவுக்கதிகமான ஐஸ்கிரீம், நான்வெஜ் அயிட்டங்களில் புகுந்து விளையாடி விடுகிறாராம். இதனால் அவரது கொளுகொளு உடம்பு இன்னும் பெருத்து விடுகிறதாம். இதை கண்டுபிடித்து விட்ட சிம்பு, என் படத்தில் நடித்து முடிக்கிற வரை உடலை பருமனாக்கும் உணவுகளை நினைத்துகூட பார்க்கக்கூடாது என்று ஹன்சிகாவுக்கு தடை போட்டுள்ளாராம்.




