Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மனிதாபிமானமற்ற செயல் - பணம் சம்பாதிக்க இது தான் நேரமா? : ரித்விகா கண்டிப்பு

22 மார், 2020 - 12:46 IST
எழுத்தின் அளவு:
Rithvika--Condemned-high-rate-on-sanitizer

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து ஒவ்வொருவரும் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு, முகத்தில் மாஸ்க் அணிய வேண்டும், அடிக்கடி சோப் வைத்து கை கழுவ வேண்டும், கைகளில் சானிடைசர் திரவத்தை தேய்த்து கொள்ள வேண்டும் என பல்வேறு அறிவுரைகள் மருத்துவர்களால் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், நாடு முழுவதும், மாஸ்க் மற்றும் சானிடைசர்களின் விலை அனைத்துக் கடைகளிலும் அதிகமாகி இருக்கிறது. இது பலரையும் கோபமடைய வைத்திருக்கிறது.
இது நடிகை ரித்விகாவையும் கோபப்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அவர் வீடியோ பதிவு ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: வழக்கத்தை விட நாம் அதிக முறை கை கழுவத் துவங்கி இருக்கிறோம். வீட்டில் இருக்கும் குழந்தைகள், பெரியவர்கள் என எல்லோருமே கை கழுவுகிறோம். அதற்கு ஒரு சிறு விழிப்புணர்வு வேண்டும். என்னவென்றால், இருபது நொடிகள் தொடர்ச்சியாக கை கழுவ வேண்டும் எனச் சொல்லியிருக்கிறார்கள். அனைவருமே தண்ணீர் குழாய் திறந்துவிட்டுக் கொண்டேதான், இருபது நொடிகளும் கை கழுவுகிறோம். நான் உட்படப் பலருக்கும் அது மறந்து விடுகிறது. இப்போது கோடை காலம். கண்டிப்பாக ஏப்ரல், மே, ஜூனில் தண்ணீர் பற்றாக்குறை அதிகமாகி விடும்.

ஆகையால் கை கழுவும் போது, முதலில் கையை ஈரமாக்கிவிட்டு, குழாயை மூடிவிடுங்கள். பின், சோப்பு போட்டு, இருபது நொடிகள் கையைச் சுத்தமாக்கிவிட்டு, பின், குழாயைத் திறந்து கழுவுங்கள். இதன்மூலம், நிறையத் தண்ணீரைச் சேமிக்க முடியும். தண்ணீரை முன்பைவிட அதிகமாகவே, இப்போது உபயோகித்து வருகிறோம். பெரியவர்கள், குழந்தைகள் என அனைவருக்கும் இதைச் சொல்லுங்கள்.

சோப், சானிடைசர், மாஸ் உள்ளிட்டவை எப்போதும் விற்கும் விலையை விட அதிகமாக விற்கப்படுகிறது. நானே ஒரு மருந்துக் கடையில் கேட்டேன். ஐம்பது மிலி கொண்ட சானிடைசர் விலை 220 ரூபாய் என சொன்னார்கள். அதன் சரியான விலை எண்பது ரூபாய்தான். இது, ரொம்ப கேவலமான ஒரு விஷயம். பெரிய டீலர்கள் இந்த மாதிரி நேரத்தில் வழக்கமான நேரத்தை விட கொஞ்சம் குறைவான விலையில் கொடுக்க வேண்டும்.

இந்த நேரத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பது, மனிதாபிமானமற்ற ஒரு செயல். சாலையில் பணிபுரிபவர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு, இந்த நேரத்தில், நீங்கள் சானிடைசர்களை இலவசமாகக் கொடுக்க வேண்டும். ஒரு சின்ன சானிடைசர் பாட்டிலை 220 ரூபாய் கொடுத்து அவர்களால் வாங்க முடியாது. இந்த நேரத்தில் சுகாதாரம் ரொம்பவே முக்கியம். பணப் பற்றாக்குறையும் இருக்கிறது. இந்த நேரத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பது தவறு. இதற்கு அரசாங்கம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ரித்விகா கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
விமர்சித்தவர்களுக்கு கிண்டலாக பதிலடி கொடுத்த மோகன் ஜி!விமர்சித்தவர்களுக்கு கிண்டலாக ... வதந்தி பரப்புவோரை கை கழுவுவோம்: விவேக் வதந்தி பரப்புவோரை கை கழுவுவோம்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Subbanarasu Divakaran - bengaluru,இந்தியா
28 மார், 2020 - 00:18 Report Abuse
Subbanarasu Divakaran நம் நாட்டில் பலரும் கஷ்டப்படும் போடு விலை காலை ஏற்றி லாபம் சம்பாதிப்பது ஒரு பெரிய பாவம்.
Rate this:
Tamilan - kailasa,இந்தியா
23 மார், 2020 - 14:10 Report Abuse
Tamilan இந்த இக்கட்டான நேரத்திலேயும் விலை ஏற்றினால் .....இரக்கம் இல்லாதவன்
Rate this:
sankar - Nellai,இந்தியா
23 மார், 2020 - 10:27 Report Abuse
sankar இது ஒரு குறிப்பிட்ட கம்பனி தயாரிப்பு - அதே அம்மையார்தான் ஓனர் - சாபம் வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள்
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
22 மார், 2020 - 15:57 Report Abuse
meenakshisundaram இவர் வியாபாரிகளை குறை சொல்றாரா அல்லது துட்டை வாங்கிக்கொண்டு போராட்டம் என்ற பெயரில் ஆட்டம் போடுபவர்களை சொல்றாரா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in