Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நான் வைத்த புள்ளி சுழலாகிவிட்டது; அடுத்து அரசியல் சுனாமி தான் - ரஜினி

17 மார், 2020 - 10:26 IST
எழுத்தின் அளவு:
Rajini-speech-at-Chankaya-function

சாணக்யா இணையதள சேனல் முதலாம் ஆண்டு விழா மற்றும் விருது வழங்கும் விழா, சென்னையில், நடந்தது. அதில், ரஜினி பேசியதாவது: அரசியலில் அலை முக்கியம். அதனால் தான், அலை உண்டாக வேண்டும்; இயக்கம் உருவாக வேண்டும் என்றேன். உடனே, இவர் வர மாட்டாரா என, கேட்கின்றனர்.

சினிமாவில் இருந்து வந்த, எம்.ஜி.ஆர்., முதல்வரானார். அவர், 25 ஆண்டுகள், தி.மு.க.,வில் இருந்தார்; ரொம்ப நல்லவர்; நிறைய உதவிகள் செய்துள்ளார். கருணாநிதி முதல்வராக, அவரும் காரணம். பொருளாளராக இருந்த அவர், கணக்கு கேட்டதற்காக, கட்சியில் இருந்து நீக்கினர். அவர் மக்கள் மத்தியில் சென்று, என்ன தவறு செய்தேன்; கணக்கு கேட்டது தப்பா என, கேட்டார். அனுதாப அலை வீசியது. முதல் முறையாக, தேர்தலில் வெற்றி பெற்றார்.

அடுத்து, 1991ல், காங்கிரஸ் கட்சியோடு, ஜெ., கூட்டணி வைத்தார். ராஜிவ் படுகொலையால், தி.மு.க.,விற்கு எதிரான அலை வீசியது. முதன் முறையாக, ஜெ., வெற்றி பெற்றார். ஆந்திராவில், ஒரே ஆண்டில், மூன்று முதல்வரை, இந்திரா மாற்றினார். ஆந்திராவை தெலுங்கர் ஆள வேண்டும் என, என்.டி.ராமராவ் கட்சி துவக்கினார். அலை உருவானது; அவர் முதல்வரானார். எனவே, அலை முக்கியம்.

நான் கொஞ்ச நாள் முன், அரசியலில் புது புள்ளி போட்டேன். அந்த புள்ளி, தற்போது அமைதியாக, யாருக்கும் தெரியாமல், சுழலாக உருவாகி உள்ளது; இந்த சுழலை தடுக்க முடியாது. இது, மக்கள் மத்தியில் உருவான சுழல். அதை, வலுவான அலையாக மாற்ற, ரஜினி வந்தாக வேண்டும்; ரஜினி ரசிகர்களும் வர வேண்டும்.

அந்த அலை, கரையை நெருங்க நெருங்க, தேர்தல் நெருங்க நெருங்க, அரசியல் சுனாமியாக மாறும். அது, ஆண்டவன் கையில் உள்ளது. அந்த ஆண்டவன், மக்களாகிய நீங்கள் தான்; நீங்கள் தான், அதை உருவாக்க வேண்டும்; அது உருவாகும். அதிசயம் நிகழும். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
'தவறல்ல!''தவறல்ல!' சினிமாக்காரனால் பரவக்கூடாது: குஷ்பு விளக்கம் சினிமாக்காரனால் பரவக்கூடாது: குஷ்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

vns - Delhi,இந்தியா
19 மார், 2020 - 15:20 Report Abuse
vns சுனாமி மக்களை கொன்றது. பொருள் நாசம் செய்தது. ரஜினியின் சுனாமியும் அதைத்தான் செய்யுமா?
Rate this:
vns - Delhi,இந்தியா
19 மார், 2020 - 15:16 Report Abuse
vns அய்யோ பாவம். "எப்படி இருந்த நான் இப்படி ஆகி விட்டேன்." எல்லாமே சினிமாத்தனமாக இருக்கிறது.
Rate this:
Sankare Eswar - tuas,சிங்கப்பூர்
18 மார், 2020 - 06:08 Report Abuse
Sankare Eswar இவன் வேற காரோணவுக்கு இடையில வந்துகிட்டு நாந்தான்....நாந்தான் நான் மட்டும்தான் பெரிய கிருமின்னு காமெடி பண்ணிக்கிட்டு இருக்கான்.
Rate this:
அன்பு - தஞ்சை,இந்தியா
17 மார், 2020 - 18:45 Report Abuse
அன்பு தமிழகத்தில் ஏதாவது புரட்சி, புயல் என்று ஏதாவது பார்த்தீர்கள் என்றால், தலைவருக்கு சொல்லுங்க. ரொம்ப சந்தோஷப்படுவார். என் காதுகளுக்கு கரோனா கரோனா என்று தான் விழுகிறது. தலைவர் வைச்ச புள்ளி அழிஞ்சி போச்சோ?
Rate this:
Ragu - Brisbane,ஆஸ்திரேலியா
17 மார், 2020 - 16:38 Report Abuse
Ragu தலைவா..... போதும் புள்ளி இப்ப CORONA ஆயிடிச்சு இது போதும் இன்னும் பத்து வருஷத்துக்கு தாங்கும்
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in